வனம் அழித்து,
வளம் கொள்ளை அடித்து,
ஆழ்துளையில்
ஆற்று நீரை உறிஞ்சி,
ஓசோனை கெடுத்து,
மெய்ஞானம் கொன்று,
விஞ்ஞானம் தின்பவனே!
உன் ஞானத்தில் வரும் தலைமுறை
அழிவது புரியவில்லையா?
சுயசிந்தனை மாற்றமே
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும்..
சுற்றுப்புற சூழல் தான்
பூமியை வளமாக்கும்..
வளமுள்ள பூமியே
மனிதனுக்கு வரம் தரும் சாமி..
வளம் தரும் வானம் காப்பாய்!
வரும் தலைமுறையை காத்திடுவாய்!!
– கவிமோகனம், கோவை
…………………………………………
சுற்றுப்புறம் என்பது உன்னை சுற்றியே
சுயநலம் மறந்தால் புரியும் உண்மையே..
தன்னை மறந்து தரணி நிலம் பேணினால்
சுற்றுச்சூழல் என்பது உண்மையான சொர்க்கமே..
காப்பது நமது கடமை என்பதை கருத்தாய் சொல்லாமல்
காப்பது நமது உரிமை என்று கவனித்து செயல்பட்டால்
வாழும் காலம் வசதியாகும் இது உண்மையே..
சுய சிந்தனை செயல்பாடே
சுற்றுப்புற சூழலை சீராக்கும்..
சுமையான தனிமனித மாற்றமே
இந்த சுற்றும் பூமியை வாழவைக்கும் !
-கவிமோகனம்.
அருமை:-)