மகளிர் தின வாழ்த்து கவிதை

0
Share

மகளாய் மகுடம் தரித்து
மருமகளாய் மறுவீடு புகுந்து
மனைவியாய் மன்னவன் கை கோர்த்து
மசக்கையாகி மறுபிறவி எடுத்து
மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு
மங்காத அறிவொளியும் தந்து
மருமகனுக்கோ, மருமகளுக்கோ
மற்றும் ஒரு தாயாகி
மனைக்காத்து, மற்றவர் நலம் காத்து
மனம் தளராது மடியும் வரை
மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக வாழ
மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு!
மாதருக்கு!
மாவுலகம் காத்திட,
மாபெரும் சாதனைகள் படைத்திட,
மனதார வாழ்த்துகிறோம்.

…………………………………………………………………………….

பெண் இனம்:
பிறவி கொடுப்பவளே
பிணமாக்கப் படுகிறாள்,
சின்னஞ்சிறு சிட்டாய் பறந்தால்
சீரழிக்க படுகிறாள்,
பருவம் அடைந்துவிட்டால்
பருந்து கழுக்கு இரையாகிறாள்
வேறு எதுவும் வேண்டாம் என
வீட்டுக்குள்ளேயே இருந்தாலும்
மூடர்களால் முடக்கப் படுகிறாள்.
முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்தாலும்
வேரறுக்க படுகிறாள்.
பெண்- வெறும் இச்சை தீர்க்கும் உடல் மட்டுமல்ல,
தாயாகி உன்னை படைப்பவள்,
கவலையிலும் கண்ணீரிலும்
உன்னை காப்பவள்
எதையும் அழிக்க வல்ல ஆற்றல் படைத்தவள்
அன்பையே ஆயுதமாய் கொண்டவள்
பெண்ணினம் போற்றினால்,
உலகமே உன் பின்னால்.
பெண்ணினம் போற்றிடு
மண்ணகம் காத்திடு!

– காயத்ரி நிமலன் , கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here