தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 2 கப்
உருண்டை வெல்லம் – அரை கப்
ஏலக்காய் பொடி- சிறிதளவு
பாசிப் பருப்பு – 50 கிராம்
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- இட்லி அரிசியை 3 மணி நேரம் நீரில் ஊற வைக்கவேண்டும்.
- நன்கு ஊறிய பிறகு இட்லி அரிசியை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அதில் பாதி அளவு மாவை மட்டும் எடுத்துக்கொள்ளவும். மீதமுள்ள மாவில் உருண்டை வெல்லத்தை நன்றாக பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து, மிக்சியில் ஒரு சுற்றில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் பாசிப்பருப்பை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- அதில் வெல்லம் கலந்த மாவை போட்டு, மிதமான தனலில் கையில் பிடிக்கும் அளவிற்கு வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- மிக்ஸியில் கலந்து எடுத்து வைத்த பாதி மாவை போட்டு அடுப்பில் வாணலியை வைத்து, மிதமான சூட்டில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துள்ள மாவை போட்டு தேவையான உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
- இந்த மாவையும் கையில் பிடிக்கும் பதம் வந்தவுடன் கிளறி இறக்கி விடவும்.
- இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தட்டுகளின் மேல் தயார்படுத்தி உள்ள மாவை தனித்தனியாக கொழுக்கட்டையாக பிடித்து வைத்து, வேகவைத்து எடுக்கவும்.
- இப்போது சுவையான இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டை தயார்.