V MOVIE REVIEW –  திரை விமர்சனம்

0
Share

தயாரிப்பு: தில் ராஜு, சிரிஷ் ,லக்ஷ்மன், ஹர்ஷித் ரெட்டி

இயக்கம்: மோகன கிருஷ்ண இந்திராகாந்தி

இசை: அமித் திரிவேதி (பாடல்கள்), S தமன் (பின்னணி இசை)

நடிகர்கள்: நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதிரி

V ( TELUGU) 2020 – திரை விமர்சனம்

காதலனை கொன்னவங்களை அதே காதலனின் ஆத்மா ஈ ரூபத்தில் வந்து பழிவாங்குனா அது நானி நடிச்ச “நான் ஈ ” அதே நானி காதலியை கொன்னவங்களை வித விதமா பழிவாங்குன அது V . நம்ம ஊரு விஷ்ணு விஷால்,அருள்நிதி மாதிரி வழக்கமான மசாலா கதைகளை தாண்டி வித்தியாசமான கதைகளை செலக்ட் பண்ணி தெலுங்குல நடிப்பவர் நானி தன்னோட 25 ஆவது படமா ஒரு மசாலா ஆக்சன் த்ரில்லர் செலக்ட் பண்ணி நடிசிருக்காரு முடிஞ்சா வரை நிஜத்துக்கு நெருக்கமான ஒரு படமா அமைஞ்சுருக்கு (நான் சொல்றது மற்ற தெலுங்கு படங்களுக்கு இது )
கதைனு பார்த்த ஒரு சீரியல் கில்லருக்கும் ஒரு திறமையான போலீஸ் ஆஃபீசருக்கும் நடக்கற cat & mouse game தான் இந்த படம்.

ஒவ்வொரு கொலையின் போதும் அடுத்து யாரை கொல்வதுனு க்ளூ விட்டு செல்வது அதை புத்திசாலி போலீஸ் கண்டுபிடித்து அந்த இடத்திற்கு வரும்போது (வழக்கம்போல் ) கொலை முடிந்து கொலைகாரன் அடுத்த க்ளூ விட்டு எஸ்கேப் ஆவது எல்லாம் இந்த படத்திலும் உண்டு . திறமையான போலீஸ் ஆக சுதிர் பாபு ஆரம்பத்தில் பயங்கர buildup எல்லாம் விட்டு intro ஆகி கடைசியில் தனது medal களை surrender பன்னி தோல்வியை ஒப்புக்கொள்ளும் வேடம் நானி க்கு வழிவிட்டு அடக்கி வாசித்து நடித்திருப்பதால் “you are under arrest” போலீஸ் போலவே செயல் பட்டிருக்கிறார் ஆனால் arrest கூட பண்ணமுடியலை இவரால்..ஹீரோயின் நிவேதா தாமஸ் ஏன் இவரை ஹீரோயின் ஆ போட்டாங்கன்னா ஹீரோ பேரு ஆதித்யா ..போலீஸ் wait “தர்பார்” நியாபகம் வருதா? அதுல யாரு ஹீரோயின் நயன்தாரா ஆனா அவங்க நம்ம பட்ஜெட் கு செட் ஆகமாட்டாங்க நிவேதா தமஸ்கு தான் அதுல நல்ல கேரக்டர் வேற அதனால அவங்கள ஹீரோயின் போட்டுட்டாங்க போல வேற எந்த வேலையும் அவருக்கு இல்லை ஆனா ஆரம்பத்துல இவருக்கும் பயங்கர buildup வேற..

முழுக்க முழுக்க நடித்திருப்பவர் நானி சில angel களில் மாரி தனுஷ் போல் இருக்கிறார் .தமிழ் dubbing உம் அவரே பேசி இருக்கிறார். மிலிட்டரி கெட்டப் விட சீரியல் கில்லர் கெட்டப் இல் நன்கு நடித்திருக்கிறார் இவருக்கு ஹீரோயின் ஆக அதிதி ராவ் ஹைதிரி சிறிது நேரம் என்றாலும் மனதில் நிற்கும்படியான கேரக்டர் நானிக்கும் இவருக்குமான காட்சிகள் இன்னும் வைத்திருந்தால் அது கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கும் “கஜினி ” பட அசின் கேரக்டர் போலவே இவரது கேரக்டர் உள்ளது ஏகப்பட்ட படங்களின் காட்சிகள் ஆங்காங்கே “காக்க காக்க ” “இமைக்கா நொடிகள்” “விக்ரம் வேதா” “மங்காத்தா ” “கல்நாயக்” என பல படங்களின் காட்சிகள் ..OTT க்கு சென்சார் இல்லை என்பதால் கொரியன் படங்களை போல blood splash காட்சிகள் வித்தியாசமான முறையில் கொலைகள் எல்லாவற்றையம் காட்டி இருக்கிறார்கள்..பின்னணி இசை தமன் நானி யை பார்க்க மாரி தனுஷ் போல நமக்கு மட்டும் இல்லை தமனுக்கும் தோன்றி இருக்கிறது அதனால் மாரி BGM யை கொஞ்சம் மாற்றி இதற்கு போடு இருக்கிறார் எல்லா BGM களும் எங்கேயோ கேட்டது போலவே உள்ளது.

TALKYPIX RATING:

மொத்தத்தில் நானி என்கிற தெலுங்கு performance actor இன் தெலுங்கு ஆக்சன் மசாலா கடலில் குதிக்கும் ஆசைக்கு swimming pool போல உதவியிருக்கிறது இந்த V.

Movie Rating:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here