TRANCE MOVIE REVIEW
எளியவர்களின் நம்பிக்கையான மதம், கார்பரேட்களின் பிராண்ட் ஆக மாறுவதால் ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறது இப்படம்.
நிச்சயம் தமிழில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது..ஏன் இங்கு அப்படி பட்ட இயக்குனர்கள் இல்லையா? சாரி..இயக்குனர்கள் இருக்கிறார்கள் இப்படி பட்ட படத்தை சகிக்க முடிகிற மக்கள்தான் இல்லை..ஒரு motivation trainer மதபோதகராய் மாறி மக்களை தான் “உருவாக்கிய “அற்புதத்தால்..(நிறுத்து நிறுத்து அற்புத தை ” நிகழ்த்தி” னு தானே வரனும் ” உருவாக்கி” னு சொல்றேனு கேக்கப்படாது..” உருவாக்கிய” மற்றும் ” நிகழ்த்திய” இதற்க்கு இடையிலான தொடர்புக்கு படத்தை பாருங்க) மாற்றி பின் அதன் வீரியத்தை உணர்ந்து தானும் திருந்தி தன்னை நம்பும் கார்பரேட் கூட்டத்தை தான் எது சொன்னாலும் நம்பும் மக்கள் கூட்டத்திடம் காட்டி கொடுக்கும் வேலை பகத்பாசிலுக்கு..நிஜமாகவே நடிப்பு ராட்சன்தான் நீங்கள் பகத்..கன்னியகுமரியில் நோட்டீஸ் ஒட்டி motivation training க்கிற்கு ஆள்பிடிக்க கெஞ்சுவதும் சரி..டிவி பேட்டியில் மிசனரியின் பணத்தில் வாங்கிய கோடிகணக்காண சொத்துக்களை காட்டும்போது கால்மேல் கால் போட்டபடி உக்காந்திருக்கும் கெத்தான லுக் அருமையோ அருமை..டிரைனர் முதல் பாஸ்டர் வரையான மாற்றங்களை படி படியாக பாடிலேங்வேஜில் காட்டி இருக்கிறார்..
வில்லனாக நம்ம கெளதம் மேனன் வழுக்கம்போல இங்லீஸ்லதான் வசனம் பேசறாரு..குடி,சிகரெட்,பண போதைலாம் பழசு மதம் அதான் புதுசு என மததை ஒரு வணிக கன்டென்ட் ஆக எப்படி மாத்தறாங்கனு சொல்றாரு.ஹிரோயின் நஸ்ரியா..அவ்ளோதான் வேற அவங்களை பத்தி சொல்ல ஒன்னுமில்ல..முழு படத்தையும் தூக்கி இருப்பது பகத் மட்டுமே . நிச்சயம் மலையாள பட உலகம் போல படைப்பாளிகளை தமிழிலும் செயல்பட வைத்தால் இங்கும் TRANS ஐ விட நல்ல படங்கள் கிடைக்கும்..இல்லைனா subtitles ஒட மலையாள படங்களை பாத்துக்கவேண்டியதான்.
TALKYPIX RATING: