சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாப்பது எப்படி?

0
Share

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளைக் காட்டிலும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு முக்கியமான உடல் உறுப்பு சிறுநீரகங்கள்.‌ ‌சிறுநீரை வெளியேற்றுவது மட்டும் சிறுநீரகத்தின் பணி அல்ல. நம் உடல் முழுவதும் பாயும் ரத்தம் சிறுநீரகம் உள்ளே சென்று சுத்தமான ரத்தமாக வெளிவருகிறது. இதன் மூலம் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகிறது. நம் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான ‌நீர், உப்பின் அளவை சீராக்குகிறது. உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி உடல் முழுவதையும் தூய்மைப்படுத்துகிறது. நம் உடல் இயக்கத்திற்கு பிரதான உறுப்பான மூளையை போலவே அயராது செயல்படும் உறுப்புதான் சிறுநீரகம். நம் உடலில் வயிற்றுக்கு பின்புறம் வலது புறத்திலும் இடது புறத்திலும் பீன்ஸ் கொட்டை வடிவில் அமைந்துள்ளது.அத்தகைய சிறுநீரகங்களின் செயல்பாட்டினை இப்போது காணலாம்.

சிறுநீரகத்தின் சீரான செயல்பாடுகள் மற்றும் பயன்கள்:

 • ரத்தத்தை சுத்திகரித்து, உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
 • நம் உடலில் உள்ள உப்பின் அளவு மற்றும் நீரின் அளவை சமன் செய்கிறது.
 • ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்ய தேவையான எரித்ரோபாய்ட்டின்                  (ERYTHROPOIEITIN) உற்பத்தி செய்கிறது.
 • வைட்டமின் டி (Vitamin D) உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடைகிறது.
 • நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருந்து உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
 • ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

சிறுநீரகம் பாதிப்புகள் மற்றும் விளைவுகள்: 

உடலில் உள்ள நீர்சத்து குறையும் போது சிறுநீரகத்தின் செயல்பாடு குறைகிறது. இதனால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. அதிகமான ரத்தப் போக்கு சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைக்கும். அன்றாடம் தேவையான அளவு நீர் அருந்தாமல் இருப்பதனால் கூட சிறுநீர் விரைவில் செயல் இழக்க கூடும். உடலில் நீர்ச்சத்து அல்லது தேவையான நீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகிறது . இதுவும் சிறுநீரக செயல்பாட்டிற்கு ஒரு தடையாக அமைகிறது. மருத்துவரின் ஆலோசனை இன்றி உட்கொள்ளும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் சிறுநீரகத்தை பெரிதும் பாதிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. மேலும் போதைப் பொருட்கள் உட்கொள்வது சிறுநீரகம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாகும். மொத்தத்தில் சிறுநீரகம் ஒருநாள் சரிவர வேலை செய்யாவிட்டால் நம் உடல் மொத்தமும் பாதிக்கப்படும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

 • தினமும் தேவையான அளவு நீர் அருந்துதல் சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய உதவும்.
 • ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
 • துரித உணவுகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.
 • புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 • பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும், உப்பு அதிகம் உள்ள உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
 • உடல் பருமன் காரணமாக உடல் உழைப்பின்றி இருப்பதனால், சிறுநீரகம் செயல்பாடு குறையும்.
 • சிறுநீரக பாதிப்படைந்து இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் அறியலாம். அவை: சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும் அல்லது சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஆரம்பிக்கக் கூடும். உடல் சோர்வடையும்.
  சுவாச பிரச்சனைகள் ஏற்படும். மயக்க உணர்வு‌ மற்றும் உணவு ஜீரணமாகாமல் வாந்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.

சிறுநீரகங்களை உணவுப் பழக்கம் மூலம் பாதுகாப்பது எப்படி?

 • வெங்காயம் உண்ணலாம். இயற்கையாகவே சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும்.
 • சீரகம்: சீரகம் கலந்து காய்ச்சிய குடிநீர் அருந்துதல் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேன்மைப்படுத்தும்.
 • வாழைப்பழம் இயற்கையாகவே ஜீரண சக்தி கொண்டது. ஆகவே சிறுநீரகத்தின் ஜீரணசக்தியை அதிகரிக்கும்.
 • பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும் இது சிறுநீரகம் உடல் நச்சுகளை அகற்றுவதற்கு உதவுகிறது.
 • முளைக்கட்டிய தானியங்கள் சிறுநீரகத்தை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், சிறுநீர் கல் உருவாகாமல் தடுக்கும்.
 • ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் சிறுநீரகத்திற்கு சென்றால் சிறுநீரகத்தின் சுத்திகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
 • மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் உடலுக்கும் இதயத்திற்கும் நல்லது. ஆலிவ் எண்ணெய் சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் நன்மை வாய்ந்தது.
 • உணவில் மீன் சேர்ப்பது சிறுநீரக தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
 • சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு ,முலாம் பழங்களை பழமாக உட்கொள்ளாமல் பழச்சாறாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி ரத்தம் சுத்தமாகும். மேலும் சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்கும். சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை தினமும் ஏதேனும் ஒரு பழச்சாறாக அதாவது சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் பருகினால் மட்டுமே சிறுநீரகத்திற்கு நல்லது.
 • சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க செர்ரிப் பழ வகைகளை சாப்பிடலாம். இவற்றை உலர்ந்த பழம் ஆகவோ அல்லது சாலட் வகைகளாகவோ சேர்த்துக்கொள்ளலாம்.

மேற்கூறிய உணவுகளை உட்கொள்வது மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மேலும் சிறுநீர் மற்றும் மலம் அடக்குவது கூடாது. ஆகவே ஆரோக்கியமான உணவுகளை தேவைக்கேற்ப உண்டு நம் உடல் உறுப்புகளை பாதிப்படையாமல் பாதுகாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here