காதல் கவிதைகள் – பகுதி 1

0
Share

பிரம்மன் படைப்பில் வந்த
பிரியமுள்ள என் சகியே..
என்னைப் புரியாமல்
பிரிந்து விட்டாயே – ஏன்
பிரிந்து வாழ்வது தான்
உண்மை காதல் என்பதாலா..?
இணைந்தபின்
வாழ்வதல்ல காதல்..
பிரிந்த பின்னும்
நினைத்து வாழ்வதே
உண்மையான காதல்!

…………………………………………

அசைந்தாடும் தென்றலாய்
ஆடிவரும் தேராய்
இரவில் வரும் முழுநிலவாய்
ஈகையான உன் அன்பினால்
உயிரோடு கலந்து,
ஊண் முழுதும் குளிர்வித்து
எல்லாவற்றிலும் நீயாகி
ஏக்கங்கள் அதிகமாக்கி
ஐம்புலன்களில் அடக்கமாகி
ஒன்றுக்குள் ஒன்றாகி
ஓராயிரம் ஆண்டுகள் வாழ
ஔடதமாய் வந்தவளே..
என்றும் என் ஆருயிரே !

…………………………………………

கண்ணில்லாமல் இணைவது காதல்..
இணைந்த காதல் பிரிவதில்லை..
இணைந்தபின் வருவதெல்லாம்
வீண் மோதல்கள்..
மோதலிலும், மோகத்திலும்
வீழ்வதில்லை காதல் !
வாழ்விலும், சாவிலும்
இணைந்திருப்பதே
உண்மை காதல்!

-கவிமோகனம், கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here