சிக்கன் குழம்பு சுவையில் சுண்டல் குழம்பு

0
Share

தேவையான பொருட்கள்

 • வெள்ளை சுண்டல் – 250 கிராம்
 • சின்ன வெங்காயம் – சிறிதளவு
 • தக்காளி – 2
 • மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
 • மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
 • சிக்கன் மசாலா – 1 டீஸ்பூன்
 • தேங்காய் – 2 கீற்று
 • சோம்பு – சிறிதளவு
 • பட்டை – சிறிதளவு
 • கிராம்பு – சிறிதளவு
 • இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • கொத்தமல்லி கருவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • சுண்டலை நன்கு வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு போடவும்.
 • அதில் சோம்பு வெடித்த பின், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 • சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போடவும்.
 • தக்காளி வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் குழம்பு மசாலா சேர்க்கவும்.
 • அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
 • அரைத்து வைத்துள்ள தேங்காய் அதனுடன் சேர்க்கவும்.
 • சிறிது நீர் ஊற்றி, சிறிது உப்பை சேர்த்து, நன்கு கொதித்த பின் சுண்டலை போடவும்.
 • சுண்டலை ஒரு பத்து நிமிடங்கள் வேகவைத்து, பின் கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு இறக்கி விடவும்.
 • சிக்கன் குழம்பு சுவையில் சுண்டல் குழம்பு ரெடி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here