சுண்டைக்காயின் மகத்தான பயன்கள்

0
Share

சுண்டைக்காயை (TURKEY BERRY) பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் வத்தல் குழம்பு என்றாலே அதில் தான் முதலில் கவனம் செல்லும். எனினும் அதில் கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் சுண்டைக்காயை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.இந்தச் சிறிய சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொண்டால் அதைத் தவிர்க்க மாட்டோம்.சுண்டைக்காயில் இரண்டு வகை உண்டு; காட்டு சுண்டைக்காய், நாட்டுச் சுண்டைக்காய். இரண்டுமே ஒரே பலனைத்தான் தருகின்றன. காயவைத்த சுண்டைக்காய் வத்தல் குழம்புடனோ அல்லது நெய், எண்ணெய் ஆகியவற்றில் வறுத்து வாரம் இரண்டு மூன்று முறை உட்கொள்ளலாம். இந்த காயில் 100 கிராம் அளவில் அதாவது 22.5 மில்லிகிராம் இரும்புச்சத்தும் ,390 மில்லிகிராம் கால்சியம், 150 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. இந்த சிறிய சுண்டைக்காயின் ஒப்பற்ற பலன்களை இப்போது பார்க்கலாம்.

சுவாச மண்டலம்:

மூச்சுக் குழாயை சுத்தப்படுத்தி நுரையீரலுக்கு முழுமையான ஆற்றல் தருகிறது.நாள்பட்ட ஆஸ்துமா, வரட்டு இருமல், சளித் தொல்லையை அகற்றுகிறது. காய்ச்சலுக்கு உண்டான காரணிகளை அழிக்கிறது.

ஜீரண மண்டலம்:

வாயுத்தொல்லை, வயிற்றுப்புண், அசிடிட்டி இவை அனைத்திற்கும் சிறந்த மருந்து. வயிற்றிலுள்ள பூச்சிகள், கழிவுகளை அகற்றி மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது.

மூலம்:

மூல நோய் வருவதற்கு உண்டான ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வடிதல் போன்றவைகளுடன் எந்த வகை மூல நோயையும் குணப்படுத்த உதவும்.

இதயத்திற்கு பலம்:

ரத்தத்தில் அதிக அளவு வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. கழிவுகளை இரத்தம் சுத்தமாகி, தூய்மையான ரத்தம் இதயத்திற்குச் செல்ல உதவுகிறது. ரத்த கொதிப்பை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. பெண்களுக்கு இரத்தசோகை நோய் வராமல் தடுக்க உதவும்.

சர்க்கரை நோய்:

உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தோல்நோய்கள்:

அரிப்பு ,அலர்ஜி போன்ற தோல் நோய்களையும், தோலில் உள்ள புண்களையும் சீக்கிரமாக ஆற்றக்கூடிய வல்லமை சுண்டைக்காய்க்கு உண்டு.

கர்ப்பிணி பெண்களுக்கு:

சுண்டைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு களுக்கு வலுவூட்டுகிறது. இதனால் மூட்டுவலி, இடுப்பு எலும்பு வலி போன்றவை வராமல் தடுக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக பால் சுரக்க உதவுகிறது.

இத்தகைய நன்மைகள் வாய்ந்த சுண்டைக்காயை நம் உணவில் சேர்த்து, நோய்கள் தவிர்த்து, உடல் நலம் காத்து வாழ்வோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here