தேவையான பொருட்கள்
***********
முட்டை – 5
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
***********
- முதலில் முட்டையை சிறிதளவு உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
- முட்டைகள் வெந்ததும் அவற்றை உடையாமல் நீளமாக கீறி வைத்துக்கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டி கொள்ளவும்.
தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும். - மிதமான சூட்டில் வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறிதளவு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து,அதில் வேக வைத்த முட்டையை போட்டு உடையாமல் பிரட்டி விடுங்கள்.
- மூன்று நிமிடங்கள் கிளறி விட்ட பின் முட்டையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு வெடித்ததும், வெங்காயத்தைப் போடவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை மற்றும் தக்காளி போடவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்பு மிளகாய்த்தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்றாக கிரேவி பதத்திற்கு வந்தவுடன் முட்டைகளை உடையாமல் போட்டு, அதனுடன் கொத்தமல்லி தழைதூவி இறக்கி வைக்கவும்.
- இந்த கிரேவி சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.