SOYA BEANS CHILLI
நாம் சாப்பிடும் தானியங்களில் ஒன்று சோயா பீன்ஸ் (Soya Beans). சமீப காலங்களாக உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக டயட் பின்பற்றுபவர்கள் மத்தியில் சோயா, குறித்த பயன்பாடு அதிகளவு இருக்கிறது. சோயாவில் அதிகப்படியான இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்து உள்ளது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று. அனைவருக்கும் பிடித்த வகையில் சோயா சில்லி எப்படி செய்வது என்பதை கீழே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோயா பெரியது – 100 கிராம்
- மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்
- மல்லி தூள் – 1 டீஸ்பூன்
- சிக்கன் மசாலா அல்லது மட்டன் மசாலா – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- முட்டை – 1
- தேவையான அளவு உப்பு
- பொறிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- சோயாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி கொள்ளவும்.
- நன்கு ஊறியவுடன் , சோயாவை நன்றாகக்கழுவி , பிழிந்து எடுத்து கொள்ளவும். இரண்டு இரண்டாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது நீர் சேர்த்து , பசை போல் ஆக்கி கொள்ளவும்.
- சோயாவை பசையில் நன்றாக சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- ஊறவைத்த சோயாவை மிதமான சூட்டில் எண்ணெய்யில் வறுத்தெடுக்கவும்.
- வறுத்தெடுத்த சோயாவை கொஞ்சம் எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து பரிமாறவும்.