தயாரிப்பு: 2D Entertainment, Sikhya Entertainment
இயக்கம்: சுதா கொங்கரா
இசை: ஜி.வி.பிரகாஷ்
நடிகர்கள்: சூர்யா, அபர்னா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, விவேக் பிரசன்னா
சூரரைப் போற்று – திரை விமர்சனம்
சூரரைப் போற்று முதலில் சுதா கொங்கராவை போற்ற வேண்டும் பெண் இயக்குனர்கள் என்றால் மெல்லிய உணர்வுள்ள படங்களை மட்டுமே எடுக்கக்கூடியவர்கள், ஒரு மாஸ் ஹீரோவிற்கு கமர்சியலாக கதை பண்ண தெரியாது என்பதை பொய் என நிருபித்திருக்கிறார். அடுத்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இப்படி பட்ட ஒரு முயற்சி எடுத்த சூர்யாவை போற்ற வேண்டும். படத்தில் வரும் ஒரு டயலாக் “என் flight நான் எங்க வேணா இறக்குவேன் ” என்கிற மாதிரி “என் படம் நான் எங்க வேணா ரிலீஸ் பண்ணுவேண்ணு ” படத்தை அமேசானில் விட்டிருக்கிறார் சூர்யா. கதை என்று பார்த்தால் Air deccan உரிமையாளர் கோபிநாத் அவர்களின் கதையை சினிமாவிற்காக கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார்கள். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் சூர்யா விற்கு நல்லதொரு come back படமாக இது அமைந்திருக்கும்.
ஏற்கனவே மணிரத்தினத்தின் “குரு ” படத்தில் அபிஷேக் பச்சனிற்கு தமிழில் குரல் கொடுத்திருப்பவர் சூர்யா என்பதால் “குரு” வும் இதே கதை அமைப்பை கொண்ட படம் என்பதால் அந்த நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. எனினும் ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் ஹீரோவின் வாழ்க்கையில் அந்த லட்சியம் ஆரம்பிக்கும் மையம் இதில் நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்படி தன் வாழ்க்கையில் நடைபெற்றதால்தான் திரைக்கதையை சுவாரஸ்யம் ஆக்கும் பார்வையாளனை ஒன்றா செய்யும். இதில் அத்தகைய காரணங்களும் முயற்சிகளும் நன்றாக சொல்லப்பட்டிருக்கின்றன.
ஹீரோவின் இலக்கை நோக்கிய பயணம் என்கிற கதைகளில் ஹீரோயின்கள் ஹீரோ விற்கு ஆறுதல் சொல்லவும் ,பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலை இதில் மாறி இருக்கிறது. இதில் ஹீரோயின் அபர்ணா பாலமுரளிக்கும் ஒரு நோக்கம் உண்டு அதை அவர் எவ்வாறு அடைகிறார் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் ஹீரோவிற்கு முன்னமே இவர் இலக்கை அடைந்து சூர்யாவே இவருக்கு உதவியாளராக செயல்படுகிறார். சுதாவின் முதல் படமான “துரோகி” இல் வரும் பூர்ணா கேரக்டர் போலவே இந்த அபர்ணா கேரக்டர்..தனது கனவு ப்ராஜெக்ட்டிற்க்கு வில்லன் விலை பேச அதை மறுத்து பேசி வீடு வரும் சூர்யாவிற்கு உணவு ஊட்ட “ஏன் சோத்துல விஷம் வச்சுட்டியா ” னு சூர்யா கேட்க “ப்ராஜெக்ட வித்துட்டு வந்திருந்தா வெச்சிருப்பேனு சொல்வதெல்லாம் செம..
வில்லன்கள் 2,3 பேரு இருக்கிறார்கள் மெயின் வில்லன் பாலிவுட் பரேஷ் ராவல் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். பொருளாதார பேதத்தை தூக்கி பிடிக்கும் ஒரு ஆடம்பர மனிதரை உடல் மொழியில் நன்கு காட்டி இருக்கிறார். அப்பாவாக பூ ராமு அம்மாவாக ஊர்வசி, கருணாஸ் , காளி வெங்கட் , விவேக் பிரசன்னா ,மோகன் பாபு போன்றவர்களும் தங்களது கேரெக்டர்களை நன்றாக செய்துள்ளனர்.
பாடல்கள் அனைத்தும் கதைகுள்ளாகவே பயணிப்பது போன்று அமைத்திருப்பது சிறப்பு, காட்சிக்கு ஏற்ற பின்னணி இசையை திறன்பட செய்துள்ளார் G.V. பிரகாஷ். மாஸ் ஹீரோக்களுக்கும் தன்னால் சிறந்த கதை அமைக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் சுதா.
TALKYPIX RATING:
மொத்தத்தில் விமான பயணம் என்பது வசதியானவர்களுக்கு மட்டுமல்ல என்பதை திரையிலும், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரை அரங்குகளில் மட்டும் அல்ல OTT மூலம் வீடுகளிலும் கொண்டாடலாம் என்பதையும், படத்தை பார்த்தவர்களுக்கு தானே வென்றது போன்ற உணர்வையும் , நிஜத்திலும் ஒரு சேர நிரூபித்திருக்கிறது இந்த “சூரரைப் போற்று”.
சூப்பர்