சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

0
Share

உலகளாவிய வானவெளியில் நிறைய அற்புதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. சூரிய, சந்திர கிரகணங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. 21-6-20 அன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் சற்று அபூர்வமான சூடாமணி சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும். பூமி – சந்திரன் – சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99 சதவீதத்தை மறைக்கக் கூடும். சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு பொன் வளையம் போல ஜோலிக்கும். இது நீண்ட நேரம் இருக்க கூடியதும், வலிமையானதும் கூட என்று விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதே போன்று 2031 மே மாதம் 21ஆம் நாள் தான் கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியும், என்று பிர்லா கோளரங்க இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சூரிய கிரஹண கதிர்வீச்சின் பாதிப்புகள்

இந்த கிரகண காலங்களில் தான் பல நுண்ணுயிர்கள், வைரஸ்கள் போன்றவை தோன்றுவதும், அழிவதும் நடக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் (Ultra violet rays) தாக்கம் அதிகம் இருப்பதால் தான் இந்த நேரங்களில் உடல்நலத்தில் பலவகையான மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. இக்காலத்தில் உணவு உண்பதையும், உணவுப் பொருட்களை தயாரித்து உண்ண கூடாது என பொதுவாக சொல்லப்பட்டது. இந்த நேரத்தில் உணவு எடுத்து கொண்டால் உடலில் உள்ள குளுகோஸ் மற்றும் நீர்ச்சத்தை குறைக்க வழிவகுக்கும். இந்த கத்தி வீச்சுகளால் கர்ப்பிணி பெண்களின் கருவிற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என நம்பப்படுகிறது. ஆகையால் கதிர்வீச்சுகள் படாமல் இருக்க கர்ப்பிணி பெண்கள் வீட்டின் உள்ளேயே பாதுகாப்பாக இருக்கலாம். மேலும் இந்த கிரணத்தை வெறும் கண்களால் பார்த்தால் கண்கள் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

முன்னோர்களின் நம்பிக்கை

பொதுவாக கிரகண காலங்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, என்ற வழிமுறைகளை அன்று நம் முன்னோர்களும் இன்று விஞ்ஞானிகளும் கூறி வருகின்றனர். இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள் பல கட்டுப்பாடுகளையும், பழக்கங்களையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர். அதில் ஒன்றுதான் இந்த தர்ப்பைப் புல். கடுமையான விஷத்தன்மைகள் எதையும் மனிதனை தொடவிடாமல் பாதுகாக்கும். தவிர்க்க முடியாத சமயங்களில், அதாவது இந்த கிரகண காலங்களில் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் இந்த தர்ப்பைப் புல்லை சிறிதளவு நம்முடன் வைத்துக்கொண்டால் வரக்கூடிய தீங்கில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். தர்ப்பைப்புல் கிடைக்காத பட்சத்தில் அருகம்புல்லுடன், கல்உப்பு, சிறிது மஞ்சள் சேர்த்து பயன்படுத்தலாம்.

வீட்டில் சூரிய ஒளி படும் இடங்களில் மூடிகள் மேல், நீர் நிலைகளில் ஆகியவற்றிலிருந்து பயன்படுத்தலாம். கிரகண காகாலங்களில் கோவில்கள் மூடப்பட்டிருக்கும், இதற்கான காரணமாக இந்த சமயங்களில் கடவுளின் ஆற்றல் வலுபெற்று விடுவதால் கடவுளை தரிசிக்க முடியாது எனவும், இந்த காலங்களில் உச்சரிக்கப்படும் இறைவனின் நாமங்களை மிக அதிகமான பலனைத் தரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நாமும் இந்த கிரகண காலங்களில் நமது முன்னோர்கள் கூறியவைகளை பின்பற்றி நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here