மாசற்ற முகம் வேண்டுமா?

0
Share

நாம் நம் உடலை சுத்தமாக பராமரித்தாலே அது மேலான அழகு. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எண்ணெய் குளியல் ,பூசு மஞ்சள் உபயோகித்தல், அதிகாலையில் நீராடுவது போன்ற பல பழக்கங்களை பின்பற்றினர்.மாசில்லாத சருமமே உண்மையான அழகு. வாகனப்புகை, சுட்டெரிக்கும் வெயில், உணவு பழக்க வழக்கம் இப்படி அனைத்தையுமே எதிர்கொண்டு நம் உடலின் இயல்புத் தன்மையை அதாவது அழகினை இழக்கிறோம். இவ்வாறு மாசடைந்த சருமத்தினை சரிசெய்ய நமக்குத் தேவையானது உருளைக்கிழங்கு.

உருளைக்கிழங்கு சாரு மற்றும் அதை துருவி அரைத்து பூசுவது அனைவருக்கும் தெரிந்திருக்க கூடும். ஆனால் நாம் இங்கு வேகவைத்த உருளைக் கிழங்கினை பற்றி தெரிந்துகொள்ளலாம்.ஒரு சிறு உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் சாதம் வடிக்க கொதிக்க வைக்கும் தண்ணீரிலேயே இந்த கிழங்கை வேக வைத்து விடலாம். தனியாக வேக வைக்க அவசியம் இருக்காது. வேகவைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு உருளைக்கிழங்கை மட்டும் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் பூசி காயவிடுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். இந்தக் கலவையோடு ரோஸ்வாட்டர் அல்லது சிறிது தண்ணீர் கலந்த எலுமிச்சைச் சாறு கலந்தும் பூசலாம். இந்த வேகவைத்த கிழங்கை உபயோகிப்பது நல்ல பலனளிக்கும். வெயிலினால் ஏற்படும் கருமை, கருவளையங்கள், முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கு, கரும்புள்ளிகள் இவை அனைத்தும் மறையும். இதனை வாரம் ஒரு முறை உபயோகித்தாலே மாசற்ற முகம் பெறலாம். எப்பொழுதெல்லாம் உங்கள் முகம் பொலிவின்றி அழுக்காக இருக்கிறது என நினைக்கிறீர்களோ உடனே இதை செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here