தன்னம்பிக்கை கவிதைகள்

0
Share

எண்ணங்களை திட்டமிடு
எழுச்சியோடு செயல்படு..
செய்கின்ற வேலையை முறையோடு
பயிற்சி செய்
பயிற்சியுடன் முயற்சி செய்..
இகழ்ச்சியை புறந்தள்ளு
இலக்கை நீ வெல்லு..
முயன்றுபார்..
நீ வைக்கும் முதல் காலடி
அதுவே உன் வெற்றிக்கு முதல்படி!

…………………………………………………………………..

தயங்கினால்
நீயே தடைக்கல் ஆவாய்..
முயன்றால்
நீயே முன் உதாரணம் ஆவாய்..
உன்னால் முடியும்
உன்னை நம்பு..
உழைக்கும் வழியே
உயர்வானது இன்று ..
வெற்றிப் பயிருக்கு
வலிகளை உரமாக்கு..
வேதனைகளை
சாதனைகளாக்கு..
நிச்சயம் வெற்றியே
என்றும் உனக்கு !

…………………………………………………………………..

வாய்ப்புக்களை தேடினால்
வாழ்விழந்து போவாய்..
வாய்ப்புக்களை உருவாக்கினால்தான்
வானம் வரை வளர்ந்து நிற்பாய்..
தடைபட்ட காரணம்
புரிந்துகொள்..
தவறாமல் அதனை
அனுபவம் கொள்..
துயரங்களை தூசியென
தட்டி விடு..
உயரங்களை மெல்ல மெல்ல
எட்டிவிடு..
தனது நம்பிக்கை தான் தன்னம்பிக்கை
என்றும்தோற்க்க விடாது உன் நம்பிக்கை..
முடியும் என்று முடிவெடு..
உன் முன்னால் தெரியும்
வெற்றியை பிடித்து விடு !

– கவிமோகனம், கோவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here