சரிலேரு நீக்கெவரு – Sarileru Neekevvaru Movie Review

0
Share

தயாரிப்பு: மகேஷ் பாபு ,தில் ராஜு

இயக்கம்: அனில் ரவிபுடி, இசை: தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு: ரத்தினவேலு

நடிகர்கள்: மகேஷ் பாபு, ரஸ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ் , விஜயசாந்தி, சங்கீதா

‘sarileru neekevvaru’ அப்படின்னா உனக்கு நிகரானவன் நீயே-னு குத்துமதிப்பான அர்த்தம். பொதுவா தெலுங்கு படம்ன மசாலா, காரம் ஜாஸ்தியா இருக்கும், ஆனால் தவிர்க்க முடியாத மாதிரி இருக்கும். கோலிவுட்டில் கதை எழுதற கதையாசிரியர்கள் அஜித் அடித்தார், விஜய் அடித்தார், வில்லன் போய் force ஆ விழுந்தார் என்றுதான் எழுதுவார்கள். ஆனால் டோலிவுட்டில் மகேஷ்பாபு அடித்த அடியில், ஜூனியர் என்டிஆர் அடித்த அடியில், வில்லன்கள் தரையைப் பிளந்து கொண்டு போய்விழுந்தார்கள், அங்கு ஒரு சுனாமியே உருவானது என்றுதான் எழுதுவார்கள். தெலுங்கு படம் போல சுனாமி, பூகம்பம் எல்லாம் நமக்கு எப்பாவாவது தான் வரும். ஆனா தெலுங்கு படத்துல ஹீரோ வர்றப்போ அடிக்கடி வரும் அதான் தெலுங்கு சினிமா .

படத்தோட கதை என்னனு பார்த்தா ராணுவத்தில் இருக்கும் அனாதையான ஹீரோ ஒரு முக்கியமான மிஷனுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார். அதுல தன்னோட நண்பன் தீவிரவாத தாக்குதல உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதால, அதுவும் அந்த நண்பனின் தங்கச்சி கல்யாணம் விரைவில் நடக்கபோறதால, அந்த குடும்பத்துக்கு மகனா இருந்து கல்யாண வேலைகள் செய்ய ஒருத்தர அனுப்ப மனிதாபிமான அடிப்படையில் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவெடுக்கிறார். ஆமா நீங்கள் நினைச்ச மாதிரி அந்த பொறுப்பு நம்ம ஹீரோவிற்கு. இப்ப நம்ம ஹீரோவுக்கு அங்க போய் உதவிகள் செஞ்சாரா ? அங்க ஏற்கனேவே அரசியல்வாதியால பிரச்சனையில் இருக்கும் அந்த குடும்பத்தை காப்பாற்றினாரா? இதுதான் கதை..

ஹீரோவாக நம்ம ஸ்டைலிஷ் மகேஷ்பாபு ஆரம்பத்துல கார் வெடிகுண்டை, காபி குடிச்சிட்டு ரிமூவ் பண்ற இன்ட்ரோ வாகட்டும், இடைவேளையில் அத்தனை பேரையும் போட்டு பொளந்தபிறகு வில்லன் யாருன்னு தெரியாததால தான் கம்மியா அடிச்சிருக்கேன், தெரிஞ்சா இப்படி பேசிட்டு இருக்கமாட்டேன் என்பதெல்லாம் வேற லெவல் ஹீரோயிசம். உணர்ச்சிகளின் மூலம் பெரிதாக  நடிப்பை காட்டாமல் ஆக்சன் -ல் எல்லாவற்றையும் மெருகேற்றுவது மகேஷ்பாபுவின் பாணி. இதிலும் அதனை செவ்வனே செய்துள்ளார் மனிதர். வழக்கமா டான்ஸ், ஃபைட், டயலாக் பட்டைய கிளப்புபவர். இதுல காமெடியிலும் கலக்கி செம மாஸ் பண்ணியிருக்காரு. அதிலும் ட்ரெயினில் ஹீரோயின் ரஷ்மிகா குடும்பத்துடனும் கூட இருக்கும் ராஜேந்திர பிரசாத் கூடவும் பண்ணும் காமெடிகள் அட்டகாசம்.

ஹீரோயினாக கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தனா 3 பொண்ணுகள் இருக்கிற குடும்பத்தில் இரண்டு அக்காக்களும், லவ் மேரேஜ் பண்ணி ஏமாந்ததால தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் தன் அம்மா துணையுடன் ட்ரெயினில் பார்த்த மகேஷ்பாபுவை வளச்சு வளச்சு லவ் பண்ணும் கேரக்டர்.  இவரது அம்மாவாக சங்கீதா டோட்டல் ஃபேமிலி கலக்கல் காமெடி. பார்க்கும் ஒவ்வொருவரையும் இவர்கள் “never before here after ” என புகழ்ந்தே ஆப்பு வைப்பது ஹைலைட் காமெடி. மத்தபடி பாடலுக்கு வந்து செல்லும் ஹீரோயின் தான்.

வில்லனாக பிரகாஷ்ராஜ் அதுக்காகா சீரியஸான வில்லனாக இல்லை, ஒரு காமெடி கலந்த வில்லன். சின்னவயதில் தனக்கு நல்லதைச் சொல்லி பாடாமெடுத்த ஆசிரியரை கூடவே வைத்துக்கொண்டு தவறுகள் செய்வது.  நீங்க சின்ன வயசுல சொன்ன பாடத்தில் ஒண்ணு கூட நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என அந்த ஆசிரியரிடம் குத்திக்காட்டும் ஒரு வித்தியாசமான காமெடி அரசியல்வாதி வில்லன்.

ஹீரோவின் நண்பனின் தாயாக நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயசாந்தி. யார் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான் என சொல்லும் தைரியமான பேராசிரியை. இவரது இந்த குணமே பிரச்சனை கொண்டு வருவதும் அதிலிருந்து தன் குடும்பத்தை மகேஷ் பாபுவுடன் சேர்த்து காப்பது என அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார். நண்பன் போரில் இறந்த செய்தியை எப்படி செல்வது என தயங்கி நிற்கும் மகேஷ் பாபுவிடம் ஏற்கனவே கணவனையும், ஒரு மகனையும் இழந்துட்டு தான் இவனையும் அனுப்பினேன், அந்த தைரியம் இன்னும் என்கிட்ட இருக்கு என சொல்லுமிடத்தில் பழைய வைஜெயந்தி IPS விஜயசாந்தியை பார்க்க முடிகிறது. ஒளிப்பதிவு ரத்தினவேலு ராணுவ களமாகட்டும், கர்னூல் கிராமமாகட்டும் அருமையான விசுவல்கள். இண்டெர்வெல் சண்டைக்காட்சி அட்டகாசம்.. இசை தேவி ஸ்ரீ பிரசாத் fastfood கடை போல இவரிடம் எல்லா பாடல்களும் பாதி சமைத்த நிலையில் இருக்கும் டைரக்டரின் ருசிகேற்ப Ingredients யை மட்டும் மாற்றி பரிமாறி இருக்கிறார். ஆக்சன் காட்சிகளுக்கு மட்டும் சுமாராக போட்டு இருக்கிறார்.

மொத்தத்தில் நம்ம ஊரு பாக்கியராஜின் “பவுனு பவுனுதான் ” படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தேசபக்தி , நாட்டை காக்கும் இராணுவ வீரரின் குடும்பத்துக்கு நாட்டை ஆளும் அரசியல்வாதிகளினால் ஏற்படும் பிரச்சனைகளை மிக்ஸ் பண்ணி,  அதில் நிறைய ஹீரோயிச மசாலாவை தூவி, படைக்கப்பட்ட ஆந்திர டிஸ் ‘சரிலேரு நீக்கேவரு”.

Movie Rating:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here