தற்போது இருக்கும் இந்தியா, சீனா பிரச்சனைகளால் மக்கள் சீனா பொருட்களை புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள். சீனா, மொபைல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றது. சீனா மொபைல்களை புறக்கணிக்க வேண்டுமானால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் அல்லது வேறு மொபைல்களை மக்கள் வாங்க விரும்புவார்கள். ஆனால் சீனா மொபைல்களுக்கு மாற்றாக இப்பொது இருக்கும் ஒரே தேர்வு சாம்சங் மட்டும்தான்.
சமீப காலத்தில் Samsung Galaxy M series மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சாம்சங் நிறுவனம் ஆன்லைன் மூலமாக நேரடியாக இந்த மாடல்களை குறைந்த விலைக்கு, அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனை செய்கிறது. அந்த வகையில் Galaxy M30, Galaxy M30S, வரிசையில், இப்பொழுது புதியதாக Galaxy M31 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதன் பெயரே ‘ மெகா மான்ஸ்டர்’ என்று விளம்பர படுத்தியுள்ளது சாம்சங். அதற்கு ஏற்ப அதிக பேட்டரி , அதிக pixels கொண்ட கேமரா, அதிக செயல்திறன் கொண்ட ரேம் மற்றும் மெமரியுடன் அசத்தலாக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் விரிவாக பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
மொபைல் அளவு / Product Dimension | 159.20 x 75.10 x 8.90 |
பாடி டைப் / Body Type | Plastic |
பின்பக்க கேமரா / Rear Camera | 64-megapixel (f/1.8) + 8-megapixel (f/2.2) + 5-megapixel (f/2.2) + 5-megapixel (f/2.4) |
செல்பி கேமரா / Front Selfie Camera | 32-megapixel (f/2.0) |
டிஸ்ப்ளே / Display | (6.4″) sAmoled Display, Gorilla Glass 3 Protection,
1080 x 2400 pixels, 20:9 ratio (~411 ppi density) |
பிராசஸர் / Processor | Samsung Exynos 9611 Octa core processor |
சிப்செட் / Chipset | Mali®-G72 MP3 GPU |
OS | Android v10.0 with 2.3GHz + 1.7GHz , One UI 2.0 |
ரேம் / Ram | 6GB / 8 GB |
உள்ளடக்க மெமரி / Internal Memory | 64GB / 128 GB |
விரிவாக்கக்கூடிய மெமரி | Expandable Memory Upto 512 GB |
பேட்டரி | 6,000mAh battery and 15W Fast Charging |
சிம் ஸ்லாட் / Sim Slot | Dual SIM with dual standby (4G+4G) |
USB PORT | Type C |
மைக்ரோஃபோன் / Microphone | 3.5 mm |
சவுண்ட் / Sound | DOLBY ATMOS |
கலர் / Colour | Ocean Blue, Space Black |
வீடியோ ரெகார்டிங் / Video | 4k, 1080 full Hd Video Recording (Steady Mode) |
எடை / Weight | 191 g |
சென்சார் / Sensor | Dual SIM;GPS;Music Player;Video Player;FM Radio;Accelerometer;Fingerprint Sensor;Gyro Sensor;Geomagnetic Sensor;Proximity Sensor;
|
Connectivity, Wireless | Bluetooth, WiFi Hotspot, 2G GSM,3G WCDMA,4G LTE FDD,4G LTE TDD |
விலை விவரம் :
இந்த மொபைல் மூன்று வெர்சனில் கிடைக்கின்றது. அமேசான் மற்றும் சாம்சங் இணையதளத்தில் நேரடியாக ஆர்டர் செய்து வாங்கலாம்.
6GB RAM, 64GB Storage : ₹ 16,499.00
6GB RAM, 128GB Storage : ₹ 17,499.00
8GB RAM, 128GB Storage : ₹ 19,499.00