மரவள்ளிக்கிழங்கு சமோசா ரொட்டி

0
Share

SAMOSA ROTI RECIPE

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு – அரை கிலோ
மைதா மாவு – 2 கப்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்க் கீற்று – 2
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணை- தேவையான அளவு

செய்முறை:

  • மரவள்ளிக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து, உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மைதா மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த கலவையின் சூடு குறைந்ததும், வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
  • பிறகு பிசைந்த மைதா மாவினை எடுத்து சப்பாத்தியை போன்று தேய்த்து எடுத்துக் கொள்ளவும். இதனை சமோசாவுக்கு வெட்டுவது போல் குறுக்கே வெட்டி நான்காக மடிக்கவும்.
  • மடிப்பிற்கு இடையில் உள்ள இடத்தில், பிசைந்த மரவள்ளிக்கிழங்கு கலவையை வைத்து, ஓரங்களை கைகளால் அழுத்தி மூடிவிடுங்கள்.
  • அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, சிறிது எண்ணெய் தேய்த்து மடித்து வைத்த இந்த சமோசா துண்டுகளை இரண்டு பக்கமும் என்னை விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • பலவகையான உணவு பதார்த்தங்கள் எண்ணெயில் பொரித்து தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இப்படி தோசைக்கல்லில் ரொட்டி போல சுட்டு எடுப்பதால் சுவை வித்தியாசமாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here