மார்பிள் புட்டு

0
Share

தென்னிந்திய மக்கள், குறிப்பாக கேரளா மக்கள் சாப்பிடும் விதவிதமான புட்டு வகைகளில் இந்த புட்டு சற்று வித்தியாசமானது . மூன்று வகையான மாவுகளில் செய்யப்படுவதால் ஒரே சமயத்தில் மூன்று சுவைகளை அறியலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணக்கூடிய சத்தான உணவு .எளிதில் தயாரிக்கப்படுவதால் எல்லோரும் தயாரித்து உண்ண முடியும்.

தேவையான பொருட்கள்

 • கோதுமை மாவு – ஒரு கப்
 • ராகி மாவு – ஒரு கப்
 • மைதா மாவு – ஒரு கப்
 • தேங்காய்- ஒன்று
 • ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை

 • கோதுமை, மைதா, ராகி மாவுகளை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
 • ஏலக்காயை பொடி செய்து தேங்காய் துருவலுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
 • புட்டு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் புட்டு குழாயில் முதலில் சிறிதளவு தேங்காய் துருவலை போடவும்.
 • பிறகு பிசைந்த மாவு ஏதாவது ஒன்றை போடவும், அடுத்த மாவு போடுவதற்கு முன் சிறிது தேங்காய் துருவல் போடவும், இதேபோல அடுத்த மாவையும் போடவும்.
 • இதேபோல் மூன்று முறை குழாயில் போட்டு வேக வைக்கவும்.
 • ஆவி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
 • சுவையான மார்பில்புட்டு ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here