தயாரிப்பு: 2D எண்டர்டெயின்மென்ட் (சூர்யா & ஜோதிகா)
இயக்கம்: ஜேஜே ஃபெட்ரிக் , இசை: கோவிந்த் வசந்தா
நடிகர்கள்: ஜோதிகா, K.பாக்யராஜ், R.பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன்.
தமிழ்சினிமாவின் தீர்க்கதரிசி கமல்னு சொல்வாங்க..அவரு படங்களின் சம்பவங்கள் பிற்காலத்தில் உண்மையா நடுந்துருக்கு..அப்படி இப்ப சூர்யா..கொரோனா வைரஸ்,வெட்டுக்கிளி,கேஸ் கசிவு எல்லாம் அவர் சம்பந்தபட்ட படங்களின் சம்பவங்கள் இப்ப நிஜத்துல நடக்குது..ஆனா கமலினால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட இணையவழி சினிமாவை சூர்யா நிகழ்த்தி காட்டி இருக்கிறார்..இந்த முறை வெற்றிகரமாகவும் லாபகரமாக இருக்கும் என்றால் திரைக்கு வராமல் முடங்கி இருக்கும் கிட்டதட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட படங்கள் இப்படி ரிலீஸ் ஆக வாயப்புள்ளது..பெரிய நடிகர்களின் படங்களையே மக்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் நிலையில்..இந்த படங்கள் இவ்வகையில் வெளி இடுவது அதிக மக்களை சென்று அடைய உதவும்.சரி படம் எப்படி இருக்கு
தன்னை சீரழித்து தாயின் மீது கொலை பழி சுமத்தியவர்களை “மகள் “பெரிய “பொண்ணாகி” வந்து நீதியை நிலைநாட்டுவதே கதை.
குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேசுகிறது படம்..தப்பு செய்தவர்கள் பெரிய இடமாக இருக்கும்போது பாதிக்கப்பட்டே சிறுபெண்ணே வக்கீலாக வாதாடினால் கூட சட்டத்திற்க்கு தேவை சாட்சிகள்..என்ற நீதித்துறையின் ஒட்டைகளை சுட்டி காட்டுகிறது இப் படம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஜோதிகா மொழி படத்திற்க்கு பின் நடிப்பதற்க்கு நல்ல வாய்ப்பு வக்கீல் கேரக்டரை விட அம்மா கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். ஊட்டியில் நடைபெறும் கதை என்பதால் ஏற்கனவே தம்பி படத்தில் பார்த்த ஜோ நியாபகம் வருகிறது.
வழக்கம்போல முதல் கேஸில் வாதாடும் வக்கீலிற்க்கு அதுவரை எந்த கேஸிலும் தோற்க்காத சட்டத்தையே கரைத்து குடித்த.ஜட்ஜே வணக்கம் வைக்கும் பெரிய இடத்து வக்கீல் கதாபாத்திரம் R.பார்த்திபனுக்கு, முடிந்தவரை நன்றாக செய்திருக்கிறார். நக்கல் நாயகனை பதுக்கி இருக்கிறார்கள் ஜினல்..ஜினல் ஒரிஜினல் பார்த்திபனை காணோம்.. இவர் நல்லவாரா? இல்லை கெட்டவரா? என குழப்பி அடித்து இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜும், நாசரும் போதும்பா விட்ருங்கனு கதறிய கேரக்டர் அதனால் பார்த்திபன் நடித்திருப்பார் போலும் ஜோவிற்க்கு ஆதரவு தரும் கேரக்டரில் பாக்கியராஜ் அவருக்கு இன்னும் முக்கியத்துவம் வைத்து இருக்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்யராஜ்,பாண்டியராஜன், பார்த்திபன் குரு சிஷ்யர்கள் ஒரே படத்தில் என்ன காரணமோ?. ஜட்ஜாக பிரதாப்போத்தன் முடிந்தவரை நன்றாக செய்திருக்கிறார். வில்லனாக நம்ம மம்பட்டியான் தியாகராஜன் பார்வையிலேயே மிரட்டும்படி இருந்தாலும் கிளைமேக்ஸில் சொதப்பல்.
நல்ல கருத்தை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லும் முயற்சியில் பாதி அளவே வெற்றி பெற்று இருக்கிறார்கள். பாதி படத்திலேயே எளிதில் யூகிக்க முடிகிற சஸ்பென்ஸ், அந்த சஸ்பென்ஸும் வேறு விதமாய் அமைவது மட்டுமே நன்றாக இருக்கிறது. தியேட்டரில் ரிலீஸ் பன்னாலும் வெற்றி அடைவது கஷ்டமே. சினிமாவிற்க்கு தேவை நல்ல கருத்துடன் கூடிய கன்டென்ட்டுகள். வெறும் நல்ல கருத்து இருந்தால் மட்டும் போதாது. எல்லா படத்திலும் கெட்டவன் அழிவான் நல்லவன்தான் வாழ்வான் இந்த ஒரே கதைதான். ஆனால் கெட்டவன் எப்படி அழிகிறான் நல்லவன் எப்படி வாழ்கிறான் இதில்தான் அடங்கி இருக்கு ஒராயிரம் கன்டென்டுகள்.
TALKYPIX RATING:
பொன்மகள் வந்தாள் – பெண் குழந்தைகளுக்கு நேரும் அநீதிகளை நினைவு கூர்ந்து சென்றாள்.