பெப்பர் சிக்கன்

0
Share

PEPPER CHICKEN RECIPE

தேவையான பொருட்கள்

 • சிக்கன் – ஒரு கிலோ லெக் பீஸ் மட்டும்
 • சின்ன வெங்காயம் – 200 கிராம்
 • பச்சை மிளகாய் – 2
 • தக்காளி – 5
 • இஞ்சி – சிறிதளவு
 • பூண்டு – சிறிதளவு
 • பட்டை கிராம்பு – சிறிது
 • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
 • மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் – சிறிதளவு
 • சிக்கன் மசாலா – 2 டீஸ்பூன்
 • மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • கொத்தமல்லி கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 • சிக்கனை நன்கு சுத்தம் செய்து குறுக்கு நெடுக்காக கீறிக்கொள்ளவும்.
 • அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு போட்டு அது வெடித்தவுடன், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
 • பிறகு இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்த தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கவும்.
 • பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா போட்டு கிளறி விடவும்.
 • மிளகாய் தூள் வாசனை நின்றவுடன், சிக்கனைப் போட்டு கிளறிவிட்டு, மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.
 • நன்றாக வெந்தவுடன், எண்ணெய் மிதந்து மேலே வரும்போது மிளகுத்தூள் போட்டு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.
 • சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here