பெண்குயின் திரை விமர்சனம் | PENGUIN MOVIE REVIEW

0
Share

தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ்

இயக்கம்: இஷ்வர் கார்த்திக் , இசை: சந்தோஷ் நாராயணன்,

ஒளிப்பதிவு: பழனி கார்த்திக்

நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், லிங்கா, நித்யா கிருபா, மாஸ்டர் அத்வைத்

தங்களுடைய “பெண்களை” சாதாரண பெண்களாகவும், பக்கத்து வீடு, எதிர்வீடு மற்றவர்களின் பெண்களை “குயின்” களாக கருதி பெற்றோர்கள் செய்யும் ஒப்பீடுகள் ஒவர்டோஸ் ஆவதின் பாதகங்களை பற்றி சொல்வதே “பெண்குயின்”.

மக்கள் முன்னணி நடிகர்கள் படங்களையே தியேட்டருக்குப் போய் பார்க்க விருப்பப் படுறாங்க. அதனால சிறிய பட்ஜெட் மற்றும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு OTT ஒரு நல்ல தளமாக இருக்கும். OTT இல் இது இரண்டாவது படம் இதுவும் ஹீரோயின் சப்ஜெட் படமே..பொதுவாக ஹீரோயின் சப்ஜெட்களை தியேட்டர்களில் சென்று அவ்வளவாக மக்கள் ரசிப்பதில்லை. மாயா, அறம், அருந்ததி என்று சில படங்கள் திகில், கிராபிக்ஸ் போன்றுவற்றுக்காக ஒடினாலும் மற்றவை சென்டிமென்ட்,மென் சோகத் திரைபடங்களே..அதனால்தான் முன்னணி ஹீரோயின் கீர்த்தி சுரேஸின் படமே இப்படி ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சரி கதை என்ன? யாராலயோ கடத்தி செல்லப்பட்டு காணாமல் போன தன் மகனை சில வருடங்களுக்கு பிறகு அந்த தாய் பார்க்க நேர்ந்தால்? அப்றம் என்ன சந்தோசம்..மகிழ்ச்சி அதானே? அதுதான் இல்லை வந்த மகன் மனசிதைவடைஞ்ச ஒரு அசாதாரணமான சிறுவனா இருக்கான். அதனால அந்த நிலைக்கு காரணமானவங்க யாருனு கண்டுபிடிச்சு காரணத்தை அந்த தாய் தெரிஞ்சுக்கறதே கதை. இதே கதையம்சத்தோடு மிகசமீபத்தில் “Forensic” என்ற மலையாளப்படம் வந்தது. ஏறக்குறைய கதையின் மையம் சிலபகுதிகள் இரண்டு படத்திலும், ஒரே மாதிரி இருக்கும். இரண்டு படங்களும் கடத்தப்பட்ட குழந்தைகளின் மனச்சிதைவை பற்றிப் பேசுகிறது. எனினும் “Forensic” ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “பென்குயின்” ஒரு சென்டிமென்ட் திரில்லர் படம் என்ற அளவில் மாறுபடுகிறது.

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் மகனை கடத்தியவனை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்ற கேரக்டருக்கு உண்டான அந்த போல்ட்னஸ் மிஸ்ஸிங். கீர்த்தி சுரேஷ் எனும் புறாவுக்கு கழுகு மாதிரி பெயின்ட் அடித்தால் அது வேட்டையாடிவிடுமா என்ன.. ஏதோ கொஞ்சம் இளைதிருப்பதால் சோகமான காட்சிகளுக்கு ஒப்பேற்றுகிறார். படம் முழவதும் கர்பிணியாக நடித்தாலும் அந்த உணர்வை காட்டாமலே நடித்திருக்கிறார். சோகமும், கோவமும் கலந்த கேரக்டரில் முடிந்த அளவு சோகத்தை மட்டுமே காட்ட முயன்றிருக்கிறார். அட ஒரிஜினலாக தனது பையனை கடத்தியவங்களை பற்றி தெரியவரும்போது நமக்கு வரும் கோவம் கூட அவருக்கு வரமாட்டேங்குது.
கீர்த்தியின் மகனாக வரும் சிறுவனும், டாக்டராக நடித்திருப்பவரும் ஒரளவு நன்றாகவே செய்திருக்கிறார்கள். இருந்தாலும் குற்றவாளியை பிடித்து பாதிக்கப்பட்டவர்களையும், குற்றவாளியை பேச விட்டு போலீஸ் நின்று வேடிக்கை பார்பதெல்லாம் தியேட்டரில் பாத்திருந்தா ஊரே சிரிச்சிருக்கும். வீட்ல பாத்ததால சிரிப்பு கம்மி.

சரி எல்லாமே மைனஸானு கேட்டா இல்ல..ஒளிப்பதிவு சூப்பர், கொடைக்கானல் ஊசியிலை காடுகளின் ஏரியல்வியூ Shot ஆகட்டும்..வில்லன் வீட்டு கொலைகளமாகட்டும் அருமையாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பழனி கார்த்திக். அப்புறம் இசையை பொருத்தவரை, பாடல்கள் அவ்ளோ நல்லா இல்லனாலும், பின்னனி இசைல பின்னிருகாரு சந்தோஷ் நாராயணன். அதுவும் வில்லன் பிஜிஎம் செம்ம..

TALKYPIX RATING:
மொத்தத்தில் ராட்சசனை போல இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சார்லி சாப்ளின் மாஸ்க் போட்டு ஏமாற்றி விட்டார்கள். இன்னும் கடத்தப்பட்ட சிறுவனின் மனநிலையையும், கொலையாளி அவ்வாறு செய்வதற்கான காரணத்தை வேறு மாதிரி மாற்றி அமைத்திருந்தால் இந்தப் “பெண் குயின்” நிச்சயம் தமிழ் சினிமா உலகில் ஒரு குயினாக மிளிர்ந்து இருந்திருக்கும்.

Movie Rating:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here