உடலுக்கு தெம்பு வேணுமா கம்பு சாப்பிடுங்க!

0
Share

கம்பு தானியத்தின் அவசியம் (PEARL MILLET)

உணவு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். ஊன் உருக உழைப்பது நல்ல உணவுக்காகத் தான். நல்ல ஆரோக்கியமான உணவு உடல்நலம் மற்றும் மனநலம் காக்கும். ஆனால் இன்று சுவையை விரும்பி ஆரோக்கியமற்ற பல துரித உணவுகளை உட்கொண்டு உடல் நலக் குறைவுக்கு நாமே வழிவகுக்கிறோம். உலகம் முன்னேறுகிறது, தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் உடல் நலத்தை நாமே பாதிக்கச் செய்கிறோம்.

ஆனால் நம் பெற்றோர் வாழ்ந்த காலத்திலும் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நாம் நாகரீகத்தை காரணமாகக் காட்டி ஒதுக்கிய உணவு பதார்த்தங்களையே முக்கிய உணவாகக் கருதினர். அவற்றுள் சிறுதானிய வகைகள், பயிறு வகைகள், தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் முதலியன அடங்கும்.
இன்று நாம் அரிசியை உண்பதே போதும் என்று நினைக்கிறோம். ஆனால் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை விட உடல் நலம் தரக்கூடிய சிறுதானியங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் கம்பு. கம்பு என்று கூறினாலே நம் நினைவுக்கு வருவது கம்பஞ்சோறு மற்றும் கம்பங்கூழ். வெறும் கம்பங்கூழை உணவாக உட்கொண்டு வேலை செய்பவர்களை இன்றும் காணலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களில் ஒன்று தான் கம்பு. பொதுவாகவே தானிய வகைகளை உட்கொண்டால் உடல் வலுவடையும்.

கம்பு தானியத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் 

அமினோ அமிலம், காபோகைட்ரேட், நார்ச்சத்து, Saturated Fat, Monounsaturated Fat, Polyunsaturated Fat, Omega-3 Fatty Acids, Omega-6 Fatty Acids, வைட்டமின் E,  K, Thiamin, Riboflavin, Niacin, B6, Folate, Pantothenic Acid, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பொஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், சிங், கொப்பர், மங்கனீஸ், செலினியம்.

கம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:

  • கம்பு உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும், கொடுக்கும்.
  • இறந்த உடல் சக்தியை மீண்டும் தர வல்லது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வைட்டமின்களையும் நார்ச்சத்தையும் அளிக்கவல்லது கம்பு.
  • உடல் சூட்டை தணிக்கும்.
  • பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கும்.
  • கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் அஜீரணக் கோளாறுகள், குடல் மற்றும் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.
  • உடல் எடையை கட்டுப்படுத்தி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. இதனால்தான் நமது முன்னோர்களுக்கு உடல் எடை சார்ந்த நோய்கள் இருந்ததில்லை. அவர்களது தோற்றமும், சுறுசுறுப்பும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் உணவு என்பது ஆரோக்கியம் கொடுப்பதாக இருக்க வேண்டும். ‌ கம்பு ஒன்றிலேயே இத்தனை நன்மைகள் பெற முடியும். ஆகையால் நம் பாரம்பரிய உணவு பழக்கங்களை முறையாக கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here