மூளை – ஒரு முக்கியமான உறுப்பு மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகளை காட்டிலும் சற்று சிக்கலான உறுப்பும் தான். நம் உடல் இயக்கத்திற்கு உதவும் எல்லா உறுப்புகளையும் மூளையே செயல்படுத்தி, கட்டுப்படுத்தி வருகிறது. நமக்கு தேவையான எல்லா தகவல்கள் செய்திகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் நமக்கு நினைவாற்றல் மூலம் நினைவுபடுத்துவது இந்த மூளையே. அத்தகைய மூளையை பற்றி நாம் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
- ஒரு வயதானவரின் மூளையின் எடை 3 பவுண்டுகள் ஆகும்.
- மூளை பகுதியில் 70% நீர் அடங்கியுள்ளது. ஆகவே சிறிய அளவு நீர் வரட்சி மூளைப்பகுதியில் ஏற்பட்டாலும் மூளையின் செயல்பாடுகளை மாற்றி எதிர்மறை ஆகும். இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.
- மூளையின் எடை அதிகமாக கொண்ட விலங்கு ஸ்பெர்ம் வேல் ஆகும். இந்த வகை திமிங்கிலத்தின் மூளையின் எடை 20 பவுண்டுகள் ஆகும்.
- மனித மூளையின் எடை பிறந்து ஒரு வருடத்தில் உருவாகும் அளவை விட மூன்று மடங்கு பெரியதாக வளரும் இயல்புடையது. மூளையின் வளர்ச்சி 18 வயது வரை தொடரும்.
- கழுத்து மற்றும் தலை பகுதியின் தசைகளும் நரம்புகளும் கலந்து மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் தலைவலி ஏற்படுகிறது.
- ஒரு சராசரி மனிதனின் மூளையில் தோராயமாக 100 பில்லியன் நியூரான்கள் அடங்கியுள்ளது.
- மனிதன் தனது மூளையை 10 சதவீதமே உபயோகிக்கிறான் என்பது கட்டுக்கதை. உண்மையில் மூளையை முழுமையாக உபயோகிக்கிறோம். அதிலும் தூங்கும் போது கூட 10 சதவீதத்திற்கு அதிகமாக உபயோகிக்கிறோம்.
- மனித உடலில் உள்ள கொழுப்பு தான் கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு உதவுகிறது. ஆனால் அதிக கொழுப்பின் அளவு வெவ்வேறு விளைவுகளை வயதுக்கு ஏற்ப விளைவிக்கிறது.
- நம் பார்க்கும் பொருள் நினைக்கும் எண்ணம் செய்யும் செயல் பற்றிய தகவல்களை நியூரான்கள் மூளைக்கு எடுத்துச் சென்று கொண்டே இருக்கும். வெவ்வேறு வேகங்களில் இந்த நியூரான்கள் தகவல்களை எடுத்துச் செல்லும். நியூரான்கள் தகவல்களை எடுத்துச் செல்ல எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச வேகம் 250 mph.
- மூளையால் வலியை உணரமுடியாது. வலிக்கான அறிகுறிகள் காட்டும். ஆனால் உண்மையில் மூளைக்கு வலியை உணராது.
- மனிதனின் வயது அதிகமாகும்போது மூளையின் எடை குறையத் தொடங்கும்.
- எகிப்து நாட்டில் இறந்தவரின் சடலத்தை பதனீடு செய்யும்போது மூளையை மூக்கின் வழியாகத்தான் வெளியே எடுப்பார்கள்.
Like!! Thank you for publishing this awesome article.