வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்க இதை செய்யுங்கள்!

0
Share

HOW TO REMOVE SUN TAN

இன்றைய வாழ்க்கை முறையில், நாம் எவ்வளவு தான் செலவு செய்து நம்மை அழகு செய்து கொண்டாலும், ஒரு சில காரணங்களினால் அனைத்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் எப்பொழுதும் அலங்காரம் செய்து கொள்வதில் தான் நாட்டம் அதிகரிக்கிறது. இயற்கையாக அழகு பெறுவது பற்றிய சிந்தனை இல்லாமல் போய்விடுகிறது. வெள்ளையாக இருப்பவர்களையும் சில நேரம் முகம் சுளிக்க வைப்பது வெயில். எத்தனை பாதுகாப்புடன் வெளியே சென்றாலும் அத்தனையையும் பாழாகிறது இந்த வெயில். 21ம் நூற்றாண்டில் நமது உடலில் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணம் வெயில் அதாவது சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மற்றும் அதிக வெப்பம்.

கோடை காலங்களில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பாதிக்கப்படுகிறோம். ஒருசிலருக்கு எப்போது வெளியில் சென்றாலும் முகம் கருப்பாகி விடும் (SUN TAN). இதனால் நம் சரும ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வெயிலில் பலருக்கு முகம், கால் மற்றும் கைகளில் மட்டும் கருமையாக மாறிவிடும். இதனால் பலரின் உடல்நிறம் மொத்தமாக மாறிப்போகிறது.

இத்தகைய சரும பிரச்சனைக்கு எளிய தீர்வு , நவீன அழகு சாதன பொருட்களை காட்டிலும், நம் வீட்டிலேயே தினமும் பயன்படுத்தும் பொருட்களில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் தயிர். இயற்கையாகவே வெண்மையாக்கும் தன்மை அதிகமாக உள்ளது. ஆகவே வெறும் தயிரை முகத்தில் பூசி தேய்த்துவிட்டு காய்ந்த உடன் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தாலே மாசற்ற, பளபளப்பான முகம் கிடைக்கும். வாரம் இரண்டு நாட்கள் முகத்திற்கு தயிர் உபயோகித்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

தயிர் ஃபேஷியல்:

  • முதலில் ஒரு டீஸ்பூன் தயிருடன் சிறிதளவு பால் சேர்த்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி விட வேண்டும்.
  • (cleansing) மூன்று நிமிடங்களுக்கு பிறகு காட்டன் வைத்து குளிர்ந்த நீரால் அதனை சுத்தம் செய்து விடுங்கள்.
  • இரண்டாவதாக 2 டீஸ்பூன் தயிருடன் சிறிதளவு அரிசி மாவு அல்லது பாசிப்பயறு மாவு கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் மேல்நோக்கி தேய்த்துவிட வேண்டும்.
  • (Scrubbing) கிராப்பிங் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். பின்னர் மறுபடியும் 2 டீஸ்பூன் தயிர் எடுத்துக்கொண்டு அதனோடு ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.
  • இறுதியாக 2 டீஸ்பூன் தயிருடன் கடலை மாவு அல்லது முல்தானிமட்டி சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி 15 நிமிடங்கள் இந்த ஃபேஸ் பேக்கை காயவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • இந்த இயற்கை ஃபேஷியல் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தை பளபளப்பாக வைக்க உதவும்.

முதலில் முகத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்களை நீக்க தயிர் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். குளிர்ந்த தயிராக இருந்தாலும் நல்லது. தயிருடன் சிறிதளவு மஞ்சள் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகம் ,கை கால்களில் பூசி தேய்த்துக் கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். வாரம் இரண்டு மூன்று முறை இதனை செய்யலாம்.

தயிருடன் கடலை மாவு, சிறிதளவு மஞ்சள் கலந்து அந்த கலவையை பயன்படுத்தலாம். இந்தக் கலவையை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

மேற்கூறியவற்றை பின்பற்றுவதும் மட்டுமல்லாது கருமை அடையாமல் இருப்பதற்கான வழி முறைகளையும் பின்பற்ற வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது கை ,கால்கள் மூடி இருக்கும் படி ஆடைகள் மற்றும் காலணிகள் அணிய வேண்டும். அதிகமாக வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி வெறும் நீரால் முகம் கை கால்கள் கழுவிக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here