பருக்கள் மறைய முகம் பொலிவு பெற இதை செய்யுங்கள்

0
Share

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஒருவரது தோற்றம் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அழகாக இருக்கிறோம் என்பது ஆனந்தத்தை மட்டுமல்லாமல் ஒருவித தன்னம்பிக்கையையும் கொடுக்கும். ஆனால் கருப்பான தோற்றம் பல சரும பிரச்சனைகள் நம்முள் பல பேருக்கு மன அழுத்தத்தையும் வருத்தத்தையும் தருகிறது. ஆகவே உடலும் மனமும் பாதிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் அழகு சாதனங்களும் , சருமப் பிரச்சனைகளுக்கான மருத்துவங்களும் நடைமுறையில் உள்ளது. எனினும் அவை அனைத்தும் ஏதோ ஒரு பின்விளைவை கொடுத்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் இயற்கையான முறையிலேயே அழகுபடுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அப்படிப்பட்ட இயற்கையான அழகுக் குறிப்பை பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

முக அழகிற்கு முற்றுப்புள்ளி வைப்பது இந்த முகப்பருக்கள் தான். சீபம் என்று சொல்லப்படும் ஒரு சுரப்பி முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை தோற்றுவிக்கிறது. அதிகமான எண்ணெய் பசை முகத்தில் தங்கி பருக்கள் ஆக மாறுகிறது. பருக்கள் அதிகமாகி அந்த இடத்தில் தழும்பை ஏற்படுத்தும்.

புதினா இலைகள் இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.அதிக கசப்புத் தன்மையால் கிருமிகளை அழித்து சருமத்தை பாதுகாக்கும் வேப்பிலைக்கு நிகரானது இந்த புதினா.

செய்முறை:

  • ஒரு கைப்பிடிக்கு புதினா இலைகளை எடுத்து அதை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் அதனை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சுத்தமாக கழுவிய மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
  • அரைத்து எடுத்த புதினாவை முகப்பருக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் எடுத்துக்காட்டாக கண்ணங்களில் தடவி காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
  • இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
  • இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும். கரும்புள்ளிகள் மறையும்.

அரைத்த புதினாவின் சாறெடுத்து அதனுடன் முல்தானி மட்டி அல்லது அரிசிமாவு போன்றவற்றை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். இந்த முகப்பூச்சு ஓரளவு காய்ந்த உடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முகப்பூச்சு சருமத்திலுள்ள எண்ணெய் பசையை நிரந்தரமாக குறைத்து, பருக்களால் ஏற்படும் கருமையை குறைக்கும், முகப்பொலிவு கொடுக்கும். புதினா இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை கொண்டதால் சிலருக்கு சளி தும்மல் போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதுபோன்ற தொல்லை இருப்பவர்கள் புதினா அரைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் அரைத்து, அதனை நேரடியாக பூசாமல் அவரவர் முகத்திற்கு தகுந்த பேஸ் பேக்குடன் கலந்து உபயோகிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here