கை, கால், முட்டி கருமை போக்க எளிய வழி

0
Share

முகத்தை பராமரிப்பது போலவே உடல் முழுவதையும் பாதுகாப்பதே சிறந்த உடல் நலம். கை கால்களை பராமரித்தல் இதில் அடங்கும். கை மற்றும் கால்களை சுத்தமாக வைத்திருப்பதால் பல நோய்களிலிருந்தும் நாம் பாதுகாக்கலாம். கைகளின் சுத்தமும் நம் முக அழகிற்கு அவசியம். சிலருக்கு கணுக்கால், கை மற்றும் கால் முட்டி பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

மஞ்சள் பற்றி அனைவரும் அறிந்திருக்க கூடும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல நிறத்தை கொடுக்க கூடியது. கணுக்கால் மற்றும் முட்டிகளில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும்.

  • சிறிதளவு மஞ்சள்தூள் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பசைபோல் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை கணுக்கால்களில், கை முட்டிகளில் தடவி நன்கு தேய்க்க வேண்டும்.
  • கருமை முழுவதிலும் தடவி நன்றாக விரல்களை வைத்து சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள்.
  • பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் கணுக்கால்கள் மட்டும் கை முட்டிகளில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்கள் காணலாம்.

அதுமட்டுமில்லாமல், இந்த கலவை கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்க மிகவும் பயனுள்ளது . மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ (Vitamin E), லாரிக் அமிலம் (Lauric Acid) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants), குறுகுமின் (Curcumin) நிறைந்த மஞ்சள் மற்றும் வைட்டமின் பி (Vitamin B) நிறைந்த தேனுடன் சேர்க்கும் பொழுது , சரும பிரச்சனைகளை குணமடையச் செய்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியும்பொலிவும் தந்து, அதேசமயம் மிருதுவாகவும் மாற்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here