நூற்றாண்டுக்கு ஒருமுறை உலகை உலுக்கிய நோய்கள்

0
Share

உலகை உலுக்கிய நான்கு கொடிய நோய்கள் கொடிய நோய்களை பற்றி அனைவரும் அறிந்திருக்க கூடும். ஆனால் சரியாக ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒரு கொடிய நோய் பரவி வருகிறதுஎன்றால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த 21ம் நூற்றாண்டில் கொரோனா (COVID-19) வைரஸ் எப்படி பரவுகிறது அதேபோல் கடந்த நூற்றாண்டுகளிலும் ஒவ்வொரு கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

Great Plague of Marseille (1720-1723)

முதலாவதாக 1720 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்உள்ள மார்செயில் பகுதியில் பிளேக் என்கின்ற கொள்ளை நோய் பரவியது. இந்தக் கொடிய நோய் Great Plague of Marseille என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் மார்செயில் உள்ள துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மூலமாக பரவியது. மேலும் அந்தக் கப்பலில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் எலிகள் மூலமாக இந்த நோய் அந்த ஊர் முழுவதும் பரவியது. இந்தப் பிளேக் நோயால் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Cholera Pandemic (1817–1824)

அதன்பின் 1820 ஆம் ஆண்டு காலரா என்ற கொடிய நோய் இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசியா பகுதியிலிருந்து பரவியது. மேலும் இந்த நோய் மத்திய கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளிலும் பரவ தொடங்கியது. இந்தியாவில் கல்கத்தாவிலிருந்து அசுத்தமான அரிசியில் உருவான வண்டு பூச்சி மூலமாக இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது. இந்த நோயால் இந்தோனேசியா தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்த மக்கள் உயிரிழந்தனர். இந்தக் கொடிய நோய் 1817 முதல் 1824 வரை நீடித்து இருந்ததால் உலகம் முழுவதும் இதன் பாதிப்புமிகவும் அதிகமாக இருந்தது.

Spanish Flu: 1918-1920

இதற்கு அடுத்த நூற்றாண்டான 1920ஆம் ஆண்டு த Spanish Flu அல்லது H1N1 influenza A virus என்ற கொடிய நோய் பரவியது. இந்த நோய் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவியது.இந்த நோயினால் ஐம்பது மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். ஸ்பானிஷ் ப்ளூ என்பது இந்த நோயின் பெயர் மட்டும்தான். ஆனால் இந்த நோய் பிரான்சிலிருந்து தான் தொடங்கியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் நடந்த முகாம் மூலமாக இந்த நோய் பரவத் தொடங்கியிருக்கிறது. முதலில் பறவைகள் மற்றும் பன்றிகளுக்கும் பின் அந்த மருத்துவமனையில் உள்ள மனிதர்களுக்கு பறவியது. இந்த நோய் ஜனவரி 1918ஆம் ஆண்டு தொடங்கி 1920 வரை நீடித்திருந்தது. 1920-ஆம் ஆண்டு தான் ஸ்பானிஷ் ப்ளூ தீவிரமடைந்தது. இந்தக் கொடிய நோயினாலும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.

CORONA VIRUS: 2019

இறுதியாக இந்த 21ம் நூற்றாண்டில் கொரானா வைரஸ். சீனாவில் வூஹான் (Wuhan) மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய இந்த நோய் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு தகவலாக மட்டும்தான் இருந்தது. மார்ச் 2020 வரையிலும் கரோனா வைரஸ் பற்றிய அதிகாரபூர்வமான எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.ஆனால் இன்று கொரோனாவும் கொரானா பற்றிய செய்தியும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒரு கொடிய நோய் பரவுவதும் உலக மக்கள் உயிரிழப்பதும் இயற்கையின் நியதியா அல்லது மனித இனம் இயற்கைக்கு புறம்பாக செய்த தவறுகளின் பிரதிபலிப்பா? எனினும் இதைப் போன்ற இயற்கை சீற்றங்கள் அல்லது கொடிய நோய்கள் ஏற்படுவதால் மட்டுமே நாம் மனிதம், ஒற்றுமை, தூய்மை இயற்கை பராமரிப்பு போன்றவற்றை உணர்கிறோம் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here