நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்தான உணவுகள்

0
Share

கொரோனா தொற்றுநோய் தொடங்கிய நாள் முதல் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தலைவலி, காய்ச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆக இருந்தாலும் உயிர்விடும் நிலை வரை நம்மை கொண்டு செல்வது எது? அதற்கு என்ன காரணம். நம் தாய்நாட்டை காட்டிலும் மற்ற நாடுகளில் உயிரிழப்புகள் சற்று அதிகம் என்றே கூறலாம். கொரோனா நோய் பரவுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒருவரின் தனிப்பட்ட உடலின் நிலையே நோயின் தீவிரத்தை, பாதிப்பை தீர்மானிக்கிறது. Covid-19 மட்டுமல்ல எந்த ஒரு நோயையும் எதிர்கொள்ள நமக்கு இன்றியமையாத ஒன்று நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி. இது எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் சக்தி ஆகும்.

நாம் உண்ணும் உணவின் மூலம் நம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் மூலம் நம்மை தாக்கும் நோயிலிருந்தும், நம் உடலில் ஏற்படும் உபாதைகளில் இருந்தும் பாதுகாப்பதுதான் இந்த நோய் எதிர்ப்பு சக்தி. நாம் உண்ணும் உணவு தான் இந்த ஆற்றலை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்போது பரவிவரும் கொரோனா நோயை குறைப்பதற்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியை இன்றியமையாத ஒன்றாகும். இந்த சக்தியின் குறைபாடு காரணமாகத்தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆகவே நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை எத்தகைய உணவுப்பொருட்கள் மூலம் பெறமுடியும் என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்தான உணவுகள்:

  • வைட்டமின் சி நிறைந்த பழ வகைகளை உண்ண வேண்டும். ஏனென்றால் அவை நுரையீரலை பாதுகாக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனி, கொய்யாப்பழம், கேரட், தக்காளி ஆகியவற்றை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
  • வாரம் இரண்டு முறை கீரைவகைகளை சமைத்து சாப்பிடுவது நல்லது.
  • தினமும் பாலுடன் மஞ்சள் சேர்த்து அருந்துவது சளித்தொல்லையை போக்கும். மேலும் பால், தயிர் நெய் போன்ற பால் பொருட்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். இது நம் உடலுக்கு வலு கொடுப்பதுடன் வைட்டமின்-ஏ சத்து நிறைந்தது.
  • தினமும் மூன்று அல்லது நான்கு பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். ‌ இதைத்தவிர முருங்கைக்கீரை, எள்ளு, பொட்டுக்கடலை, உலர் திராட்சை, கருப்பு சுண்டல் ஆகியவற்றில் ஒன்றை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். பாசிப்பயிறு, வேர்க்கடலை , பாதாம் ,பிஸ்தா, முந்திரி ஆகியவற்றையும் தவறாது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • அசைவம் சாப்பிடுபவர்கள் ஆட்டு ரத்தம் மற்றும் ஈரல் ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
  • முளைக்கட்டிய பயிறு வகைகளை சிற்றிடை உணவு போல உண்ணலாம்.
    இதைத்தவிர நாம் குடிக்கும் நீரில் சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து அதை அருந்தலாம். நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது நம் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
  • பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் இவற்றிற்கு முதலிடம் அளித்து, நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
  • முக்கியமாக மதுப்பழக்கம், சிகரெட் ஆகியவற்றை தவிர்த்தாலே போதுமானது.

மேற்கூறிய அனைத்துமே நம் இந்திய நாட்டின் உணவு பழக்கத்தின் சிறப்பம்சமாகும். நாம் பழங்காலம் தொட்டே இதைத்தான் உணவு முறையாக பின்பற்றி வருகிறோம் இதை மேலும் தொடர்ந்து பின்பற்றினால் நம் ஆரோக்கியம் நம் கையில். ருசிக்காக உண்ணுவதை விட சில உணவுப்பொருட்களின் உன்னதம் அறிந்து உணவாக உட்கொண்டால் நோயின்றி வாழலாம், நாம் வாழும் நாட்களையும் அதிகரிக்கலாம். உணவே மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே எனினும் அதை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே நம் ஆரோக்கியம் சிறக்கும். எத்தகைய நோய் தொற்று வந்தாலும் நாம் அதிலிருந்து மீண்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here