DIL BECHARA MOVIE REVIEW | நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் சுஷாந்த்

2
Share

தயாரிப்பு:சஞ்சீவ் வர்மா

இயக்கம்: முகேஷ் சப்ரா

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே

நடிகர்கள்: சுஷாந்த் சிங் ராஜ்புட், சஞ்சனா சங்கி, சைப் அலி கான்

DIL BECHARA திரை விமர்சனம்

படம் வெளிவருவதற்கு முன்னாடியே பார்த்தாக வேண்டும் என்று ரசிகர்களால் மனதால் ஏற்றுக் கொல்லப்பட்ட திரைப்படம் DIL BECHARA. சுஷாந்த் நடித்த முந்தைய படங்களில் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, வெற்றி ,தோல்வி என எல்லாவற்றையும் தன் தேர்ந்த நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும் அவர் இறந்த பிறகு இந்தப் படம் வெளியிடப்பட்டதால் படத்தை பார்க்கவேண்டும் என்பதல்ல, சுஷாந்த் வாழ்ந்துவிட்டு போன DIL BECHARAவில் நமக்கு என்ன செய்தியை சொல்லிவிட்டு நம்மை விட்டுச் சென்றார் என்று பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்தில் ஹீரோயின் கிசி பாஸுவை (சஞ்சனா) பார்க்கும்போதே நோயாளி என்பது தெரியும். தன்னுடைய அன்றாட வாழ்க்கையை யதார்த்தமாக ” ஒரு ஊர்ல ஒரு இளவரசனும்,  இளவரசியும் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்தாங்க” அப்படின்னு ஆரம்பிச்சு தான் எப்படி வாழ நினைக்கிறாங்க அப்படிங்கறத அழகாய் சொல்லி இருப்பாங்க. கேன்சர் நோயாளியா இருந்து, தன்னோட சாதாரண ஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது தான் அவங்களுக்கு பெரிய கனவாக இருக்கு. எப்போதும் கையில ஒரு சிலிண்டர் பாக் வைத்துக்கொண்டு, அதுவே தனக்குத் துணை என பல இடங்களில் அதை யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். புஷ்பிந்தர் சிங் என அந்த சிலிண்டருக்கு பெயர் வைத்து தன்னைப்போன்ற கேன்சர் நோயாளிக்கு இது தான் துணை என்று தன்னுடைய ஏக்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படி நோயாளியாக தன்னுடைய வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கும் கிசி பாஸு, தன்னுடைய இளவரசனை காண்கிறாள். ஆரம்பத்திலேயே தன்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராக அறிமுகப்படுத்தி, எப்போதும் துருதுருவென இருக்கும் ஒரு இளைஞனாக அறிமுகமாகிறார் சுஷாந்த் (இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர் என்கிற மேனி). அவரும் கேன்சர் நோயினால் தன் ஒரு காலை இழந்த நோயாளி. ஆகவே இருவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டு தன் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

என்னதான் கேன்சரால் பாதிக்கப்பட்டாலும் தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை சிரிக்கவைத்து, மகிழ்வித்து, அன்பு செலுத்தி வருகிறார் ஹீரோ. தொடக்கத்தில் Manny- ன் (சுஷாந்த்) செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்தாலும் , கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது காதல் வயப்படுகிறார். தனக்குப் பிடித்த பாடலை கேட்கச் செய்து தன்னுடைய கனவை சொல்லாமல் சொல்லுகிறார். Manny ரஜினி ரசிகராக இருப்பதால் தானும் அதை பார்த்தாக வேண்டும் என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் கிசி பாஸு.

ஹீரோவிற்கு நண்பராக நடித்த ஜெ.பி கதாபாத்திரம் கேன்சர் நோயினால் பார்வை இழக்கிறார். தங்களின் நோய் பாதிப்பை அதிகமாக கொட்டி தீர்க்காமல் இதுதான் எங்கள் வாழ்க்கை என்று மூவரும் தங்கள் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இருவரின் காதல் வளர, இருவரின் விருப்பமும் வளர்கிறது. தன் நண்பனின் திரைப்படம் எடுக்கும் ஆசையை இறுதிவரை நிறைவேற்ற முயற்சிப்பது நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற அவளின் பெற்றோரிடம் போராடும்போது தன் காதலை நிரூபிக்கிறார் சுஷாந்த். பெற்றோர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இருவரும் பெற்றோருக்கான அதிகபட்ச அக்கரையை பல இடங்களில் நிரூபிக்கிறார்கள். ஹீரோயின் அப்பாவிடம் Manny தன்னுடைய மனதிலுள்ள வலியை பகிரும் காட்சி அனைவரின் மனதையும் தொடுகிறது. சில இடங்களில் Manny அடிக்கும் சாதாரண ஜோக்குகளும் ரசிக்க வைக்கிறது.

இடையில் காதலர்கள் இருவருமே நோயின் இறுதிகட்டத்தை நெருங்குகிறார்கள். எனினும் ஹீரோ தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற Paris – க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இருவரும் தன் காதலை உறுதி செய்கிறார்கள். சயிப் அலி கான் சில நிமிடங்கள் வந்து போனாலும் அவர் பேசிய வசனங்கள் வாழ்க்கையின் உண்மை வரிகளை நமக்கு நினைவு கூறுகிறது. தங்களின் காதல் உரையாடலுக்கு SERI (சரி) என்ற தமிழ் வார்த்தையை உபயோகித்து இருப்பது இன்னும் அழகு சேர்க்கிறது.

Paris-லிருந்து திரும்பியவுடன் ஆரம்பிக்கிறது கதையின் உச்சம். தான் இறக்கப் போவதாக சொல்லி தன்னுடைய இறுதி சடங்கை தானே காண வேண்டும் என்ற அவரது ஆசை அனைவரது கண்களிலும் கண்ணீர் வரச் செய்கிறது. தன்னை மகிழ்விக்க வந்தவன் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்ற உணர்ச்சியை ஹீரோயின் வெளிப்படுத்தும்போது நம் மனதை உருகச் செய்கிறது.

இறுதியில் Manny நோய் முற்றி இறந்து விடுகிறார. அவர் இறந்த பிறகு தன் நண்பன் படத்தை அனைவரும் பார்க்கின்றனர். அந்தக் காட்சி படத்திற்காக எடுத்ததாக இல்லாமல் நிஜமாகவே சுஷாந்த் நினைவுகளை நம் முன்னே நிறுத்துகிறது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட இரு காதலர்கள் தங்களுடைய காதலையும், உணர்வுகளையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு ஏற்றுக்கொண்டு பயணிக்கிறார்கள் என்பதையும், அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறோம் என்பதையும், அதிக உணர்ச்சிகரமான வசனங்கள் இல்லாமல், அளவாக தகுந்த உரையாடல்கள் மூலம் நச்சென்று வெளிப்படுத்துகிறது இந்த படம்.

சுஷாந்த் இன் காதல், குறும்பு, என எல்லாவற்றிற்கும் இசை மூலம் மேலும் நம்மை கட்டி போட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். நிறைய இடங்களில் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்க வேண்டிய காட்சிகளை மெல்லிய இசை மூலம் காட்டியிருப்பது, நமக்கு உணர்வுபூர்வமாக புரிந்துவிடுகிறது. சில விஷயங்களை உணரத்தான் முடியும், வார்த்தைகளால் சொல்ல முடியாது அதுபோலதான் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசை. இறுதியில் Manny கூறிய வார்த்தைகள் “என் காதலி இருக்கும் வரை என் காதல் இருக்கும்”, என்பது காதலர்களுக்கு அவர் பேசிய பொன்மொழிகள்.

இந்தப்படத்தில் நாம் அறிய வேண்டிய இன்னொரு கருத்து, தன் வாழ் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு காதல் வந்தால் தான் அது காதலா? எல்லா காதலர்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டு சென்றிருக்கிறார் சுஷாந்த். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அவரின் சிரிப்பு நம்மை ஈர்க்கிறது. இன்னும் அவரின் இந்த சிரிப்பை நிஜமாக காணமுடியாதா என்ற ஏக்கத்தையும் கண்ணீரையும் வரச் செய்கிறது. படத்தில் ஹீரோ இறந்துவிட்டார் என்பதை தாண்டி நிஜமாகவே இறந்துவிட்டாரா? என்று ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சிந்திக்க வைக்கிறார் சுஷாந்த்.

TALKYPIX RATING:
மொத்தத்தில் 100 நிமிடங்களில் என்னவெல்லாம் உணர்த்த முடியுமோ அதனை அழகாக, தெளிவாக, உணர்வுபூர்வமாக, எங்கேயும் படத்தின் சுவை மாறாமல், முழுமையாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நினைவலைகளுடன் நமக்கு பரிசளித்திருக்கிறார் இயக்குனர்.

Movie Rating:

2 COMMENTS

  1. Just wish to say your article is as amazing. The clearness in your post is just great and i can assume you’re an expert on this subject.
    Well with your permission let me to grab your feed to keep updated with forthcoming post.
    Thanks a million and please carry on the enjoyable
    work.

    Also visit my web blog: CBD for Sale

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here