ஸ்வீட் டைமண்ட் கட்ஸ் பலகாரம்

0
Share

DIAMOND CUTS SWEET RECIPE

தேவையான பொருட்கள்:

மைதா – அரை கிலோ
எண்ணெய் – அரை லிட்டர்
சர்க்கரை – அரை கிலோ
சமையல் சோடா – சிறிதளவு
ஏலக்காய் – 4
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

 • முதலில் மைதா மாவை, தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து இறுக்கமாக நிலையில் பிசைந்து கொள்ளவும்.
 • அரை மணி நேரத்திற்கு ஒரு பாத்திரத்தில் அப்படியே விடவும்.
 • பிறகு சப்பாத்தி பலகையில் பூரிக்கு உருட்டுவது போல் மெல்லிதாக, அகலமாக உருட்டிக் கொள்ளவும்.
 • உருட்டிய மாவை சிறிய கத்தி கொண்டு, சிறிது சிறிதாக டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
 • வெட்டிய துண்டுகளை ஒரு பேப்பரில் பரப்பி விட்டு, காற்றில் ஈரப்பதம் குறையும் வரை உலர விடவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை ஊற்றி, நன்கு சூடானதும் காய வைத்த மைதா மாவு டைமண்ட் கட் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
 • சர்க்கரையை வாணலியில் வைத்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
 • பாகு பதம் வரும்போது, ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
 • பொரித்து வைத்துள்ள மாவு டைமண்ட் கட் துண்டுகளில், பாகுவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி குலுக்கி விடவும்.
 • நன்றாக பாகு பரவி கிடைத்ததும், இனிப்பு பலகாரம் சாப்பிடுவதற்கு தயாராகிவிடும்.
 • இதுவே இனிப்பு இல்லாமல் காரமாக வேண்டுமென்றாலும் மைதா மாவு பிசையும் போது,தேவையான மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து முன்பு கூறியது போல் உலர வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கார பலகாரம் கிடைக்கும்.
 • இது மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here