சிக்கன் பொடிமாஸ்

0
Share

CHICKEN DRY FRY RECIPE

தேவையான பொருட்கள்

 • சிக்கன் எலும்பில்லாதது -அரை கிலோ
 • சின்ன வெங்காயம் – 150 கிராம்
 • பச்சை மிளகாய் – 4
 • மஞ்சள்தூள் – சிறிதளவு
 • சீரகம் – 1 டீஸ்பூன்
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • பட்டை – சிறிதளவு
 • கிராம்பு – சிறிதளவு
 • இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
 • எண்ணெய் – தேவையான அளவு
 • தக்காளி -3
 • கொத்தமல்லி கருவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • சிக்கனை ஒரு பாத்திரத்தில், சிறிது மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
 • நன்றாக வெந்தவுடன் சூடு ஆறும் வரை வைத்து, பிறகு வெந்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
 • அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போடவும்.
 • பிறகு சோம்பு சீரகம் போட்டு லேசாக வறுக்கவும்.
 • அதனுடன் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கிளறவும். கிளறிவிடும் போது இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.
 • இப்போது கலவையுடன் பிய்த்து வைத்துள்ள சிக்கனை போட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
 • சிக்கனில் உள்ள நீர் முழுவதும் வற்றி, ஒரு வறட்சியான நிலையில், கருகி விடாமல் கிளறி எடுத்தால் சிக்கன் ட்ரை பொடி மாஸ் ரெடி.
 • பாத்திரத்தை இறக்கும் போது, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
 • இது சப்பாத்தி குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here