கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

0
Share

கடந்த ஆறு மாதங்களாக உலகமே உச்சரிக்கும் ஒரு வார்த்தை கொரோனா (CORONA VIRUS). இந்த நோயினால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளும் உண்டு, உயிர்தப்பிய முதியவர்களும் உண்டு. சாதாரணமாகவே கடந்த பத்து வருடங்களில் ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் வந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனினும் அத்தகைய சீற்றங்களிலிருந்து அரசு உதவியுடன் நம்மால் மீண்டு வர முடிந்தது. ஆனால் கொரோனா வைரஸ் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் சற்று யோசிக்க வைக்கிறது. கண்ணால் பார்த்த, அனுபவித்த பாதிப்புகளை விட கண்ணுக்கு புலப்படாத வைரஸினால் ஏற்படும் இந்த அவலம் நம்மை மிகவும் துன்புறுத்துகிறது.

இத்தகைய சூழலில் நாம் உணர வேண்டியது ஒன்றுதான். இயற்கைக்கு முன் அனைவரும் சமம். பெரியவர்- சிறியவர், உயர்ந்தவர்- தாழ்ந்தவர், ஏழை- பணக்காரர், படித்தவர்- பாமரர், இளைஞர்-வயதானவர், சாதி, மதம், மொழி, நிறம், நாடு உலகம் என எல்லா வேற்றுமையையும் தோற்கடிக்கும் வல்லமை கொண்டது கொரோனா. ஆம்! யாராக இருந்தாலும் சரி, வேற்றுமை பார்க்காமல் தண்டித்து விடுகிறது.

பொதுவாக எந்த ஒரு நோயும் பரவாமல் இருப்பது, பாதுகாப்பது இவற்றைவிட யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என்பதையே முதலில் நாம் சிந்திப்போம். யாருக்கு நோய் வந்துவிட்டது, இவருக்கு நோய் வந்து இருக்குமோ? என்ற கேள்விக்கு பதில் தேடுவதே நம் எண்ணமாக இருக்கும். இப்படி நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்க்கும் சில பிரபலங்களை நோய்த்தொற்றிற்கு ஆளாக்கியுள்ளது இந்த கொரோனா. யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்க்கலாம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்:

நம் நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இந்நோய் சுகாதாரம் இல்லாத நிலையையே முன் வைக்கிறது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பிரபலங்களையும், முக்கிய பிரமுகர்களையும், அரசியல்வாதிகளையும் பார்க்கும்பொழுது எத்தனை சுகாதாரமாக இருந்தாலும் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் இன்று அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்துகிறது இந்த COVID-19. யாராக இருந்தாலும், உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் விரைவில் இந்நோயில் இருந்து அனைவரும் குணமடையவும், நோய்த்தொற்று விரைவில் குறைந்து நாம் அனைவரும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்போம்!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here