அண்ணாத்த –  திரை விமர்சனம்

0
Share

தயாரிப்பு: Sun Pictures

இயக்கம்: சிறுத்தை சிவா

இசை: டி.இமான்

நடிகர்கள்:ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யு, மீனா, குஷ்பு, சூரி

அண்ணாத்த – திரை விமர்சனம்

தான் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுத்து காதலனுடன் சென்ற பாசத் தங்கையின் வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மாயக்கண்ணணாக மறைந்து நின்று தீர்க்கும் அன்பு அண்ணனின் கதைதான் “அண்ணாத்த”. ஒரு மனிதரின் சிரிப்பு நம்மையும் சிரிக்க வைத்து ,அவரின் கோபம் நம்மையும் கோபமடைய வைத்து, அவரின் சோகம் நமது கண்களை சுரக்க வைத்து, அவரின் வேகம் நமக்குள்ளும் ஊற்றெடுக்க வைக்க இந்த 70 வயதிலும் முடிகிறதென்றால் அது “சூப்பர் ஸ்டார்” ரஜினியால் மட்டுமே சாத்தியம்.

“பேட்ட” “தர்பார்” ஐ விட இதில் இளமை துள்ளலுடன் அதகளப்படுத்தி இருக்கிறார் ரஜினி. குறிப்பாக “சாரகாத்தே” பாடலில் கலர் கலர் குர்தாக்களில் மாஸாக இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் உடனான சென்டிமென்ட் காட்சிகளில் கிளாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதிலும் காதலனுடன் சென்ற கீர்த்தி உடன் குரல் தளுதளுக்க போனில் பேசும்போது “காளையன்” க்குள் “முள்ளும் மலரும் ” “காளி” வந்து போகிறார். பார் ஃபைட்டில் கீர்த்தி செல்லும் வரை பொறுத்திருந்து ஆடியோ சிஸ்டத்தின் சவுண்ட் ஏற..ஏற.. காத்திருந்து பிறகு வெளுப்பது.. அபிமன்யுசிங் வாகனங்களை தெறிக்க விடுவது. மஞ்சத்தண்ணி விளையாட்டு என ஆக்சன் சரவெடிகளை கொளுத்தி அரங்கம் மொத்தத்தையும் அதிர வைத்திருக்கிறார். கொரோனவால் மூடிக்கிடந்த தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டத்தை வரவழைத்து முழுவதும் entertain செய்து அனுப்புவது எல்லாம் இந்த “மாஸ் மன்னன்” ஆல் மட்டுமே முடியும் .

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ், என்னதான் நயன்தாரா ஜோடி என்றாலும் ரஜினி-க்கு அடுத்தபடி முக்கியமான கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்.மகிழ்ச்சியான காட்சிகளை விட சோக காட்சிகளில் இவருடைய நடிப்பு அதிகம் ஈர்க்கிறது. இவருடைய இளைத்த தோற்றமும் இதற்கு பிளஸ் பாயின்ட் ஆக அமைந்திருக்கிறது. என்ன நயன் வாயிலாக இவருக்கு ரஜினி தரும் பூஸ்ட் அப் வார்த்தைகளுக்கு பிறகு ஏற்படும் “சிங்கப்பெண்” உணர்வு மிஸ் ஆகி “சிறு பெண் ” ஆகவே காட்சி தருகிறார் கீர்த்தி.மற்றபடி செண்டிமெண்ட் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார். நயன்தாரா, குஷ்பூ , மீனா , சூரி ,சதீஸ் , பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி போன்றவர்களும் தீபாவளிக்கு வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை போல அவர்கள் வந்த வேலை முடிந்ததும் கிளம்பி விடுகிறார்கள்.

அதிரடி ஆக்சன் ஹீரோயிச கயிற்றில் குடும்ப உறவுகளின் உன்னதத்தை திறம்பட கோர்த்து கண்கவர் “கமர்சியல் மாலை” ஆக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா. “சென்டிமென்டில் முக்கி எடுத்த ஹீரோயிசம்” இந்த வகை கதைகளில் தான் ஒரு “மாஸ்டர்” என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சிவா.இந்த சிறு,குறு,பெரு வில்லன்கள் என்ற தெலுங்கு மசாலாக்களை மட்டும் குறைத்து நம் மண் சார்ந்த மசாலாக்களை சேர்த்தால் பதார்த்தம் கொஞ்சம் யதார்த்தமாக இருக்கும் என்பதும்,கிளைமாக்சை கொல்கத்தா வில் முடிக்காமல் கீர்த்தியின் கணவர் குழந்தை என கிராமத்தில் முடித்து “SIVA AND TEAM ” என போட்டிருக்கலாம். ரஜினியின் நிழலில் கீர்த்தி நடந்து செல்லும் படத்தின் மைய கருத்தை சொல்லும் அந்த இண்டெர்வெல் பிளாக் மிக அருமை.

இசை இமான், சூப்பர் ஸ்டாருடன் முதல் படம் என்றதும் தனது பெஸ்ட் ஐ தர வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து பாடல்கள், பிஜிஎம் என கலந்து கட்டி அடித்திருக்கிறார். அதிலும் “வா சாமி” “மாஸ் சாமி” “என்னுயிரே” இன்னோரு “கண்ணான கண்ணே”. செண்டிமெண்ட் பிஜிஎம் களில் மட்டும் சிறிது சீரியல் எபெக்ட் மற்றபடி “தீம்” மியூசிக் எல்லாம் “தீ”தான்.

இன்னைக்கு, கீர்த்தி பின்னாடியே ரஜினி இருப்பாராம் ஆனா கீர்த்தி க்கு தெரியாதாம் என கேள்விகேட்டு சிரிக்கும் இன்றைய தலைமுறைகளுக்கு. உண்மையான குடும்ப உறவுகளின் பாசத்தையும், அன்பையும் உணர வாய்ப்பில்லை.

TALKYPIX RATING:

மொத்தத்தில் உண்மையான பாசத்திற்கு முன் மத்ததெல்லாம் ” என்னாத்த?” என்கிறார் இந்த “அண்ணாத்த”.

Movie Rating:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here