இறைவன் உன் வசமே!

0
Share

மதங்கள் கண்டு வாழ்பவன் மனிதனல்ல
மனிதம் கண்டு வாழ்பவனே மனிதன்..
படைத்த மனிதத்தில்தான்- என்றும்
படைத்தவன் வாழ்கிறான்..
என் மதமே பெரியது என்பதைவிட்டு
என் பிறப்பே அரிது என்பதை புரிந்துகொண்டால்
என்றும் இறைவன் உன் வசமே..

……………………………………………………………………….

கல், மணல்களில் இல்லை ஆண்டவன்
கட்டுப்பாடுள்ள இதயத்தில் இருப்பவனே இறைவன்..
கோடிகளில் உருவாகும் ஆலயங்களிலும்
தெருக்கோடியில் உருவாக்கும் கோயில்களிலும்
தன்னலம் கருதி மதம் பேனுவதாலும்
தரணியில் இருப்பதில்லை இறைவன்..
இறைவன் இன்றி இதயம் இல்லை -நல்ல மனிதன்
இதயத்திலின்றி இறைவன் வேறு எங்கும் இல்லை
அடுத்தவரை அன்பு செய்தால்..
ஆண்டவன் உன்னிடம் மட்டும் தான் இருப்பான்!

……………………………………………………………………….

படைத்த இறைவனையே பாகம் பிரிக்கும்
பகுத்தறியா மனித இதயமே..
இறைவனை அறிய- மனித இதயங்கள் திறக்கப்பட வேண்டும்
வழிமுறைகள் மாற்றப்படுவதால்
வழிபடும் முறையும் மாறுகிறது..
உயிர்க்கொல்லி ஒன்று உலகை ஆட்டுவிக்கும் போது
கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை..
அழியும் மனித உயிருக்கு
ஆண்டவன் துணை போகின்றானா?அல்லது
ஆண்டவனும் தடுமாறுகிறானா?
நிலைகுலையும் உலகத்திற்கு நிம்மதி எப்போது?
இருட்டில் இருக்கும் இறைவா நீ கூறு?

-கவிமோகனம், கோவை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here