ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை உணவுகள்

0
Share

ஆரோக்கியமான உடலுக்கு நல்ல சத்துள்ள உணவு தான் ஆதாரம். வளர்ந்துவரும் மனிதகுலம் எல்லாவற்றையும் அவசர அவசரமாகத் தான் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய வேகமான ஓட்டத்தில் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஏதோ பசியை அடக்கினால் போதும் என்ற நிலையில் கண்ட கண்ட பதார்த்தங்களை உட்கொண்டு உயிர் வாழும் நாட்களை குறைத்து கொண்டிருக்கிறார்கள் .இந்த செயற்கையான முறையில் செய்யப்படும் உணவுகளில் சுவையை மட்டுமே பெரிதாக நினைத்து சாப்பிடுவதால் தேவையற்ற நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு அவஸ்தைப் படுகிறது இன்றைய மனித குலம். இதை உணர்ந்துகொண்ட சில மனிதர்கள் தற்போது இயற்கை சார்ந்த உணவுகளுக்கு மாறி வருகிறார்கள். அதனால்தான் தற்போது எங்கு பார்த்தாலும் இயற்கை முறை வைத்தியம், பாரம்பரிய வைத்தியம், ஹோட்டல்களில் பாரம்பரிய வீட்டுமுறை சாப்பாடு, யோகா, உடல் பயிற்சி மையங்கள் என வந்து கொண்டிருக்கிறது.

காடுகளிலும், கழனிகளிலும், வெயிலிலும், மழையிலும் கடுமையாக உழைத்து தான் நமது முன்னோர்கள் நூறு வயது வாழ்ந்தனர் என்றால் அதனை நாம் சற்று சிந்திக்க வேண்டும். நவநாகரீக உலகில் இன்று அதிக நாள் உயிர் வாழ முடியாமல் போவதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகள் முக்கிய காரணம் என்பது புரியும்.
மக்கள் தொகை பெருகப் பெருக உணவுத் தேவைகளும் அதிகமாகிறது. இயற்கையான முறையில் விதை விதைத்து நாற்று உருவாக்கியவை இயற்கையின் போக்கிலேயே வளரவிட்டு அறுவடை செய்த தானியங்களில் மனித குலம் வாழ தேவையான ஊட்டச்சத்துக்கள் தாராளமாக கிடைத்தன. ஆனால் இதற்கு காலங்கள் அதிகமாக தேவைப்படுகிறது உற்பத்தி செலவும் கூடுதலாகிறது எனவே தான் இதற்கு மாற்று வழியாக மரபணுக்களை மாற்றியும், ஒட்டுச்செடி முறையிலும் குறுகிய காலத்தில் மிக அதிகமான மகசூல் தரக்கூடிய பயிர் வகைகளை நவீன விஞ்ஞானத்தின் மூலம் பயிரிட்டு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக மகசூலைத் தருவதற்கும், விரைவாக அவற்றால் போதிய பலன்களை தர முடிவதில்லை.

ஆகவே இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகளில் தான் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. எனவேதான் இன்றைய சமூகம் இதை புரிந்து கொண்டு இயற்கை சார்ந்த உணவுகளை உண்ணுகிறார்கள்.
ஆகவே நாமும் இனி வரும் காலங்களில் சத்தான உணவுகளான சோளம் ,கம்பு, கேழ்வரகு, முளைக்கட்டிய பயிறு வகைகள், கீரைகள் ,நாட்டு பழங்கள் ஆகியவற்றை உண்டு உடல் ஆரோக்கியத்தை பேணுவோம். பழமையைப் போற்றுவோம்!! பாரம்பரியத்தை காப்போம்!!

ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை உணவுகள் சில உங்கள் பார்வைக்கு:

பயனளிக்கும் உணவு:

  • முளைவிட்ட கொள்ளு – உடல் பருமன் குறைக்கும் மற்றும் மூட்டு வலியை நீக்கும்.
  • முளைவிட்ட எள்ளு – உடல் எடை கூட்டும் கண்பார்வையை வளப்படுத்தும்.
  • முளைகட்டிய பச்சைப் பயிறு– உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

பயனளிக்கும் பழங்கள்:

  • சப்போட்டா – நோய் கிருமிகளை அண்டவிடாது.
  • நாவல் பழம்– கல்லீரல் கோளாறுகளை நீக்கும், குடல் புண் மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து.
  • சீதாப் பழம்– மலச்சிக்கல் நீக்கும், பருக்களை அகற்றும் தலைமுடி நீண்டு வளர உதவும், பேன் பொடுகு தொல்லைகளை நீக்கும், குளிர் காய்ச்சலை குறைக்கும் இதயத்தை பலப்படுத்தும்.
  • எலுமிச்சை பழம்– கண்களை பலப்படுத்தும், நீர் இழப்பைத் தடுக்கும், கல்லீரலை பாதுகாக்கும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும், தீராத வயிற்று கடுப்பு நீக்கும்.
    சாத்துக்குடி- பசியை தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும், ரத்த அழுத்தத்திற்கு நல்லது, கர்ப்பப்பையை பலமாக்கும்.
  • ஆரஞ்சு– நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வாழ்நாளில் இளமையை நீட்டிக்கும், பசியை தூண்டும் , மலச்சிக்கலைப் போக்கும், பல் சொத்தை வராது.
  • பப்பாளி – சிறுநீர் கல்லடைப்புக்கு மருந்து, நரம்புகள் பலம் ஆகும் ஆண்மை விருத்தியடையும், ஞாபக சக்தி மேம்படும் மாதவிடாய் கோளாறுகள் நீக்கும்.
  • பேரிச்சம்பழம்– ரத்தம் விருத்தியாகும், சருமம் பளபளக்கும், கண் கோளாறுகள் வராது, இருமல் கபம் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.
  • கொய்யா பழம்– இதயத்திற்கு வலுவூட்டும், வாந்தி பேதி நிற்கும், பற்களுக்கு நல்லது, அஜீரணக் கோளாறுகளை நீக்கும், விக்கலுக்கு நல்ல மருந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here