மத்தி மீன் பொரியல்

0
Share

கடல் சார்ந்த உணவுகள் என்றுமே மனித குலத்திற்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது .கடலில் கிடைக்ககூடிய வித விதமான மீன் வகைககளில் எளிதாக கிடைக்ககூடியமீன் மத்திமீன் (Sardine Fish). இதில்ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், உடலுக்கு மிகவும் நன்மை கொடுக்க கூடியது. இந்த மத்தி மீன் பொரியல் செய்து சுவைத்து பலன் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

 • மத்தி மீன் / Sardine Fish – ½ கிலோ
 • சின்ன வெங்காயம் – 100 கிராம்
 • மிளகாய்த்தூள்  – சிறிதளவு
 • பச்சைமிளகாய் – 4
  சோம்பு – ½ டீஸ்பூன்
 • சீரகம் – ½  டீஸ்பூன்
 • கொத்தமல்லிதழை – சிறிதளவு
 • கருவேப்பிலை – சிறிதளவு
 • எண்ணெய் – தேவைக்கேற்ப
 • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

 • மத்தி மீனை நன்கு சுத்தம் செய்து தலையை வெட்டி, வாலுடன் எடுத்து கொள்ளவும்.
 • இட்லி பானையில் இட்லி வேகவைப்பது போல் உப்புமஞ்சள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
 • நன்றாக வெந்தவுடன் மீனின் வாலை பிடித்து ஒரு பாத்திரத்தில் உதிர்த்து விடவும்.
 • அடுப்பில் பாத்திரத்தை வைத்து என்னை ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு, சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை ஒவொன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 • இப்போது மிதமான சூட்டில் உதிர்த்து வைத்துள்ள மீனை கொட்டி கிளறவும்.
 • லேசான வறுவல் ஆனதும் கொத்தமல்லிதழை போட்டு இறக்கி விடவும்.
 • காரம் தேவையெனில் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
 • சுவையான ஊட்டச்சத்து மிக்க மத்தி மீன் பொரியல் ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here